(வீடியோ).,வாழைச்சேனையில் SLMC வேட்பாளர்களை நியமிப்பதில் என்ன பிரச்சனை.? பாதிக்கப்பட்ட வேட்பாளர்களின் கருத்து..

Spread the love

(ஓட்டமாவடி அஹமட் இர்ஷாட்)

கல்குடா கோறளைப்பற்று-வாழைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக வட்டாரத்திற்கான வேட்பாளர்களை நியமிப்பதில் கருத்து முரண்பாடும், பிரச்சனையும் 11.12.2017 செவ்வாய் கிழமை ஏற்பட்டு அது குறித்த பிரதேசத்தில் பூதாகரமான அரசியல் பிரச்சனையாக மாற்றமடைந்துள்ளது.

வாழைச்சேனை பிரதேசத்திற்கு வேட்பாளர்களை வாட்டார ரீதியாக நியமிக்கின்ற பொறுப்பினை முன்னாள் மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் உயர் பீட உறுப்பினருமான இஸ்மாயில் ஹாஜியிடம் வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஏற்கனவே வேட்பளர்களாக முன் மொழியப்பட்டிருந்தவர்களான மூத்த போராளியும் மஸ்ஜிதுல் ஹைராத் பள்ளிவாயலின் நம்பிக்கையாளர் சபை தலைவருமான தொப்பி கலந்தர் என அழைக்கப்படும் கலந்தர் ஷாஹிப் (4ம்வட்டாரம்), முன்னாள் இளைஞர் காங்கிரஸ் அமைப்பாளர் லியாப்தீன் (5ம் வட்டாரம்), மன்சூர், அஸ்மான் போன்றவர்களின் பெயர்கள் வெட்டப்பட்டு அதற்கு பதிலாக வேறு நபர்களின் பெயர்கள் வேட்பாளர்களுக்கான பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளமையே முரண்பாட்டுக்கும், பிரச்சனைக்கும் முக்கிய காரணம் என பாதிக்கப்பட்ட வேட்பாளர்களும், அவர்களுடைய ஆதரவாளர்களும் தெரிவிக்கின்றனர்.

அதே போன்ற கல்குடா பிரதேசத்திற்கு முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளராக இருக்கும் கணக்கறிஞர் றியால் என்பவர் கூட தலைவரின் வழிகாட்டலில் வேட்பாளர்களை நியமிப்பதில் அனுபவம் வாந்த அரசியல்வாதியை போன்று நடந்துகொள்ளமையும் இவ்வாறான பிரச்சனை தோன்றுவதற்கு முக்கிய காரணம் என பாதிப்படைந்ததாக கூறப்படும் வேட்பாளர்களினால் குற்றம் சாட்டப்படுகின்றது. மேலும் குறித்த விடயம் சம்பந்தமாக உயர் பீட உறுப்பினர் இஸ்மாயில் ஹாஜியிடம் கலந்துரையாடிய பொழுதே பிரச்சனையும். முரண்பாடும் ஏற்பட்டதாக ஊடகங்ளுக்கு பகிரங்மாக தெரிவிக்க முற்பட்டிருக்கும் பாதிக்கப்பட்ட வேட்பாளர்கள் உடனடியாக கட்சியின் தலைவர் ரவூப்  ஹக்கீம் மற்றும் மாவட்டத்தில் அரசியல் அதிகாரமிக்கவர்களாக செயற்படும் முன்னாள் முதலமைச்சர் நசீர் அஹமட், பாராளுமன்ற உறுப்பினர் அலி ஷாஹிர் மெளலான, ஷிப்லி பாரூக் போன்றவர்கள் குறித்த விடயத்தில் தலையிட்டு தீர்வினை பெற்றுத்தறுமறு வேண்டி நிற்கின்றனர்.
வேட்பாளர் நியமிக்கப்பட்டமையில் பாதிக்கப்பட்டதாக கூறும் வாழைச்சேனை போராளிகளும், அவர்களுடைய ஆதரவாளர்களும் தெரிவிக்கும் கருத்துக்கள் அடங்கிய முழுமையான காணொளி எமது இணைய நாளிதழ் வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*