இ.ஒ.கூ. தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சிபி பாருக்கிற்கு ஹிஸ்புல்லாஹ் வாழ்த்து

Spread the love

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாவனல்லையைச் சேர்ந்த சித்தி சிபி பாருக்கிற்கு புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தலைவராக முதல் தடவையாக முஸ்லிம் ஒருவர் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், 

அமைச்சர் மங்கள சமரவீரவின் கீழ் பிரதியமைச்சராக பணியாற்றியுள்ளேன். எனவே, அவர் சிறுபான்மை மக்களுடன் மிகவும் நல்ல உறவைப் பேணுகின்றார். இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் புதிய தலைராக வரலாற்றில் முதல் தடவையாக முஸ்லிம் ஒருவரை அவர் நியமித்துள்ளார். திறமையின் அடிப்படையில் இந்த நியமனத்தை வழங்கியமைக்கு அவருக்கு நன்றிகளையும் – பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மாவனல்லையைச் சேர்ந்த சிபி பாரூக்கிற்கு எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன். இ.ஒ.கூ. முஸ்லிம் சேவையில் ஏராளமான பிரச்சினைகள் உள்ளன. அவற்றை முஸ்லிம் மீடியோ போரம் உள்ளிட்ட சில அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. அது தொடர்பில் கவனம் செலுத்தி தனது பணியை திறம்பட மேற்கொள்ளுமாறு வாழ்துகின்றேன். –என்றார்

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*