தேர்தல் வன்முறை மர்சூக் சியாம் மரணம் இறக்காமத்தில் சம்பவம்…

Spread the love

உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நிறைவுற்ற சில மணித்தியாலங்களில் முதலாவது படுகொலை சம்பவம் அம்பாறை மாவட்ட இறக்காமம் பகுதியில் பதிவாகி உள்ளது.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் இறக்காமம், வரிப்பத்தான்சேனை உணவகம் ஒன்றினுள் இடம்பெற்ற வாய்த்தகர்க்கம் கைகலப்பாக மாறி உயிர்க்கொலையில் முடிந்துள்ளது.

உயிரிழந்த நபர் அட்டாளைச்சேனை பகுதியை சேர்ந்த மர்சூக் சியாம் என்பவர் என்றும், இவர் முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ. எல்.எம்.நஸீர் அவர்களின் மைத்துனர் எனவும் தெரியவருகிறது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*