என்னை யாரும் அரசியலில் இருந்து ஓரம் கட்டிவிட முடியாது! – அன்வர்டீன்

Spread the love

(பைஷல் இஸ்மாயில்)

என்னை அரசியலில் இருந்து ஓரம் கட்டுவதற்காக பல சதி முயற்சிகளுடன் அநீதிகளையும் அக்கரைப்பற்றிலுள்ள அரசியல்வாதிகள் மேற்கொண்டுள்ளனர். எனக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும், சதிகளுக்கும் நல்லதொரு தன்டனையை அக்கரைப்பற்று மக்கள் வழங்குவார்கள். என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரதம அமைப்பாளர் ஏ.பி.அன்வர்டீன் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அம்பாறை மாவட்ட அக்கரைப்பற்று பிரதம காரியாலயத்தில் இன்று (14) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அக்கரைப்பற்று பிரதேசத்திலுள்ள அரசியல்வாதிகள் என்னை தேர்தலில் போட்டியிட வைக்கக்கூடாது என்பதற்காக பல சதித்திட்டங்களைத் தீட்டி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் ஒரு ஒப்பந்தத்தை செய்து கொண்டு அக்கரைப்பற்று பிரதேசத்தில் மட்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி போட்டியிடக் கூடாது என்ற அடிப்படையில் என்னை தேர்தலில் போட்டியிடாமல் தடுத்துள்ளனர்.

இதனால் நான் தோல்வியுற்றதாகவும் எனது அரசியல் வாழ்ககை இத்தோடு முடிவடைந்து விட்டதாக அவர்கள் என்னிக்கொண்டு செயற்பட்டு வருகின்ற விடயம் ஒரு வேடிக்கையான சிறு பிள்ளைத்தன விளையாட்டாகவுள்ளது. என்னை யாரும் அரசியலில் இருந்து ஓரம் கட்டிவிட முடியாது என்பதை இந்த ஊடகவியலாளர் மாநாட்டின்போது கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

நான் தோல்வியடையவில்லை என்பதை உணரவைப்பதற்காக எதிர்வருகின்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அக்கரைப்பற்று பிரதேச மக்கள் நல்லதொரு தன்டனையுடன் கூடிய சிறந்த பாடத்தையும் கற்பித்துக்கொடுக்கவுள்ளனர். அப்போதுதான் அவர்களுக்கு விளங்கும் அன்வர்டீனை தேல்லியடையச் செய்யவில்லை நாமே நமக்கான தோல்வியை தேடிக்கொண்டோம் என்று கூறித் திரிவார்கள். அதனால் எவ்வித பலனும் அடைந்துகொள்ள முடியாது.

கடந்த 6 மாத காலப் பகுதிக்கு எவ்வித அரசியல் அதிகாரங்களும் இல்லாமல் அக்கரைப்பற்று பிரதேசத்தில் சுமார் 137 மில்லியன் ரூபா நிதியின் மூலம் பல வீதிகளை கொங்றீட் வீதிகளான மாற்றியமைத்துக்கொடுத்துள்ளேன். இப்பிரதேசத்தில் என்னால் மேற்கொண்டு வருகின்ற அபிவிருத்திகள், மேற்கொள்ளப்போகின்ற அபிவிருத்திகள் போன்றவற்றையும், மக்களுக்காக செய்கின்ற பணிகளையும் யாரும் தடுத்து நிருத்த முடியாது. எனக்கு ஆதரவாக ஜனாதிபதி இருக்கின்றார்.

என்னை யாரும் ஒதுக்கி ஓரம் கட்டலாம் என்றோ அல்லது எனது அரசியல் முன்னெடுப்புக்களை தடுத்து நிறுத்தலாம் என்றோ யாரும் என்னிவிடக்கூடாது. அதற்காக நான் பயந்து ஓடி ஒழிபவனும் அல்ல என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றேன் என்றார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*