வரலாறு படைத்த மீராவோடை அல்-ஹிதாயா மாணவி.

கடந்த 2013 ஆம் ஆண்டு எமது பாடசாலையில் க.பொ.த. உ/த யில் வெறும் 11 மாணவர்களுடன் விஞ்ஞான பிரிவு பல்வேறு சவால்களையும் தாண்டி ஆரம்பிக்கப்பட்டது. அதன் பிரகாரம் 2015 உ/த பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் 9 பேர் சித்தியடைந்து பல்கலைக்கழக அனுமதிக்கான தகமையை பெற்றுக் கொண்டனர். 2016 ஆம் ஆண்டு உ/த பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் பொறியியல் பீடத்திற்கு ஒரு மாணவன் தெரிவு செய்யப்பட்டமை இப் பாடசாலையின் ஒரு சாதனையாகும். இவ்வருடம் (2017) பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களில் MF.Rilfana எனும் மாணவி மாவட்ட மட்டத்தில் 6 ம் இடம் பெற்று மருத்துவ பீடத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார். கல்குடா வரலாற்றில் உயிரியல் விஞ்ஞான பிரிவில்
Merit அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகுவது இதுவே முதன்முறையாகும். அல்ஹம்துலில்லாஹ்

தகவல்: 
MB.MOHAMED SILMY
MEDICAL STUDENT.
EASTERN UNIVERSITY.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*