ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் காத்தான்குடி தலைமைக் காரியாலயம் திறந்து வைப்பு-படங்கள்.

Spread the love

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டலுடன் ஆரம்பிக்கப்பட்ட புதிய அரசியல் கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காத்தான்குடி பிரதேசத்திற்கான தலைமைக் காரியாலய திறப்பு விழா 28-12-2017 நேற்று வியாழக்கிழமை பிற்பகல் காத்தான்குடியில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காத்தான்குடி நகர சபைக்கான தலைமை வேட்பாளர் ஏ.எல்.எம்.நவாஸ் தலைமையில் இடம்பெற்ற மேற்படி தலைமைக் காரியாலய திறப்பு விழா நிகழ்வில் எதிர்வரும் 2018ம் வருடம் பெப்ரவரி மாதம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்ற தேர்தலில் காத்தான்குடி நகர சபைக்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் காத்தான்குடி நகர சபைக்கான தலைமை வேட்பாளர் ஏ.எல்.எம்.நவாஸ் உள்ளிட்ட ஏனைய வேட்பாளர்களினால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் காத்தான்குடி தலைமைக் காரியாலயம் நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இதில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் காத்தான்குடி நகர சபைக்கான வேட்பாளர்களும் அறிமுகம் செய்யப்பட்டனர்.

அத்தோடு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் காத்தான்குடி தலைமைக் காரியாலய திறப்பு விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் காத்தான்குடி கயா ரெஸ்டூரெண்டில் விருந்துபசாரம் வழங்கப்பட்டது.

இங்கு திறந்து வைக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் காத்தான்குடி தலைமைக் காரியாலயம் இலக்கம் -30 மெத்தைப்பள்ளி வீதி காத்தான்குடி-02 எனும் முகவரியில் மெத்தைப்பள்ளிவாயலுக்கு முன்பாக திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*