“ஊடக நண்பர் பன்னீரின் மறைவு கவலையளிக்கின்றது” இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்.

Spread the love

“வீரகேசரி பத்திரிகையின் மூத்த ஊடகவியலாளர் ப.பன்னீர் செல்வம் காலமான செய்தி கேட்டு மிகவும் கவலையடைகின்றேன். அவரது இழப்பு தமிழ் ஊடகத்துறையில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்” – என புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:-
“மூத்த ஊடகவியலாளர் பன்னீர் செல்வத்துக்கும் எனக்கும் நீண்ட காலமாக நல்ல தொடர்பு இருந்தது. அவர் சுகயீனமுற்றிருந்த போது பல தடவைகள் தொலைபேசியில் பேசியிருந்தேன்.
நீண்டகாலம் நாடாளுமன்ற செய்தியாளராக அவர் இருந்த போது அடிக்கடி நாங்கள் சந்தித்துக் கொள்வோம். சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் தொடர்பில் உள்ள சந்தேகங்களுக்கான விளக்கங்கங்களை அவர் என்னிடம் கேட்டறிந்து கொள்வார்.
பல இளம் ஊடகவியலாளர்களுக்கு குருவாக விளங்கியவர் பன்னீர். சிங்கள அரசியல்வாதிகள் மற்றும் ஊடகவியலாளர்களுடன் நல்ல தொடர்பினை பேணியவர். அவரது இழப்பு தமிழ் ஊடகத்துறையில் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
அன்னாரின் இழப்பால் துயருறும் குடும்பத்தினர், ஊடகவியலாளர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன்.” – என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*