சிறப்பாக நடைபெற்றது JDIK நடாத்திய GCE O/L எழுதிய மாணவர்களின் இஸ்லாமிய செயலமர்வு.

0
291

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் கல்விப்பிரிவின் ஏற்பாட்டில் இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவர்களுக்கான மூன்றுநாள் இஸ்லாமிய செயலமர்வு காத்தான்குடி இஸ்லாமிக் சென்றரில் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.

குறித்த செயலமர்வில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு இறுதிநாளான (29) ம் திகதி வெள்ளிக்கிழமை எழுத்துப் பரீட்சை நடைபெற்றதோடு அப் பரீட்சையில் சித்தியடைந்த மற்றும் சிறப்புப் புள்ளிகளை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு பணப்பரிசும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.

கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியாவின் செயலாளரும் வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தருமான அஷ்ஷெய்க் எஸ்.எச்.அரபாத் சஹ்வி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதிகளாக சத்தியக் குரல் பத்திரிகையின் பிரதம ஆசிரியரும் இஸ்லாமிய அழைப்பாளருமான யூனூஸ் தப்ரீஸ் மற்றும் பள்ளிவாயல் நிருவாகத்தினர், ஆசிரியர்கள் உலமாக்கள் எனப்பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here