கடமை சபதமும் பலமர கன்று வினியோகமும்

0
279

(கல்குடா செய்தியாளர்) 

ஜனாதிபதியால் 2018ம் ஆண்டு உணவு உற்பத்தி ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதை முன்னிட்டு விவசாயிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்வும் புதிய ஆண்டின் முதலாவது கடமை நாளை முன்னிட்டு கடமை சபதம் செய்யும் நிகழ்வும்  (02.01.2018) ஓட்டமாவடி பிரதேச சபையில் இடம் பெற்றது.

ஓட்டமாவடி பிரதேச சபையின் செயலாளரும் விசேட ஆணையாளருமாகிய எச்.எம்.எம்.ஹமீம் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் நிலைபேறான விவசாய அபிவிருத்தி இலக்கினை அடைந்து கொள்வதினை முதன்மையாக ஒவ்வொரு வரும் செயற்பட வேண்டும் என்ற ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய ஓட்டமாவடி பிரதேச சபையால் உற்பத்தி செய்யப்படும் இயற்கை பசளை, பயன்தரும் பல மர கன்றுகள் மற்றும் விவசாய உபகரணங்கள் என்பன தெரிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.

இதே வேலை புதிய வருடத்தின் கடமையை ஆரம்பிக்கும் முதல் நாள் என்ற வகையில் பிரதேச செயலக செயலாளரும் விசேட ஆணையாளருமாகிய எச்.எம்.எம்.ஹமீம் மற்றும் ஊழியர்கள் இவ் ஆண்டுக்கான கடமை சபதத்தினையும் நிறைவேற்றிக் கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here