மக்களுக்கான சேவைகளை உரிய நேரத்திற்குள் வழங்கி வந்தால் உங்களை யாருமே கேள்வி கேட்க முடியாது!

Spread the love

(ஏறாவூர் ஏ.ஜீ.முஹம்மட் இர்பான்)

ஏறாவூர் நகர சபையின் 2018ம் ஆண்டிற்கான நிருவாக நடவடிக்கைகள் (02) செவ்வாய்க் கிழமை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டன. அரசாங்க நிருவாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் சுற்றறிக்கை 31/2017க்கமைவாக 2018 வேலை ஆண்டு நடவடிக்கைகள் சபையின் செயலாளரும் விசேட ஆணையாளருமான. பிர்னாஸ் இஸ்மாயில் தலைமையில் இடம்பெற்றன.

காலை 9.30மணியளவில் தேசிய கொடியேற்றும் நிகழ்வுகள் சபையின் வளாகத்தில் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் முன்னிலையில் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து நகர சபையின் வளாகத்தில் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் முன்னிலையில் செயலாளரின் விசேட உரை இடம்பெற்றதுடன்

செயலாளர் தனது உரையில்,

விவசாய அபிவிருத்தி இலக்கினை அடைந்து கொள்வதனை முதன்மைப்படுத்தி அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் நிலைபேறான நோக்கு தொடர்பான எண்ணக்கருவும் இன்றைய தினத்தில் பிரகடணப் படுத்தப்பட்டுள்ளதுடன் இதனை அடைவதற்காக வேண்டி ஒவ்வொரு அரச நிருவனமும், இந்நாட்டினுடைய ஒவ்வொரு குடிமகனும் ஒத்துழைக்கவேண்டும். 2018 ஆம் ஆண்டி எவ்வாறு ஒரு இலக்கினை அடையவேண்டுமென்ற உன்னதமான நோக்கத்தை அடைவதற்காக சத்தியபிரமாணம் செய்திருக்கின்றோம் என்றார்.

பொதுமக்களின் வரிப்பணத்திலே சம்பளத்தை பெறுகின்ற அரச ஊழியர்களான நாங்கள் நாட்டிக்கு வினைத்திறனாகவும் யாருக்கும் பக்கசார்பின்றியும் நேரிய முறையிலும் பயன்தரக் கூடிய நிலைத்து நிற்கக் கூடிய சேவைகளை வழங்குவதுடன் உறுதி மொழியினை வெறுமனே வார்த்தைகளால் பேசிவிட்டுப் போகக் கூடாதென்றும் இந்த ஆண்டு முழுவதும் நான் ஒரு அரச ஊழியன் மக்களுடைய வரிப்பணத்தில் சம்பளம் பெறுகின்றேன் அவர்களுக்காக சேவையாற்றுவதுடன் எந்த நேரத்திலும் கடமைப்பொறுப்புக்களிலிருந்து விளகாமல் வருகின்ற மாற்றங்களுக்கும் தயாராக வேண்டும்.

நிருவனத்தினை பொறுப்பேற்று 45 நாட்களிலிருந்து இரவு பகலாக பாடுபட்டுவருகின்றோம். ஏதாவது மாற்றத்தினைக் காணவேண்டுமென்றும் இதற்கு நீங்களும் ஒத்துழைப்பு வழங்குவதுடன் பொது மக்களுக்கு சிறந்த முறையில் சேவைகளை வழங்குவேண்மென்ற ஒரே நோக்கத்தில் நாம் இருக்கவேண்டுமென்றும் அற்காக உங்களுடைய ஒத்துழைப்புகளை வழங்கவேண்டும்.

அலுவலகத்தில் மாற்றங்கள் வருகின்ற போது மலருகின்ற புத்தாண்டு வருடத்தில் மக்களுக்கு நல்ல சேவைகளை வழங்குவதுடன் எந்த நிறுவனம் இந்த பணிகளை எவ்வாறு சேவையாற்றவேண்டுமென்ற மாற்றத்தினுடாக மக்கள் அறிந்துகொள்வதுடன் மாற்றங்கள் இல்லாமல் எதையும் மாற்றிவிட முடியாது.

எனவே முதலில் மாற்றங்களுக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளவேண்டுமென்றும் கடமையாற்றுகின்ற ஊழியர்கள் அனைவரும் ஒங்கழுக்கென்று ஒரு திட்டத்தினை வகுத்துக் கொண்டு அது 5 வருடங்கள் அல்லது 1 வருடங்களாக இருக்கலாம் ஆனால் இத்திட்டத்தினை வகுத்து அதன்படி அரசாங்க கொள்கைகள், அரசாங்க சுற்று நிருபங்கள் மற்றும் நிதி பெறுமான ஏற்பாட்டுக் கொள்கையுடன் சேர்த்து நடவடிக்கைகளை மேற்கொள்வதால் சிறந்த முறையில் மக்களுக்கான சேவைகளை உரிய நேரத்திற்குள் வழங்கி வந்தால் உங்களை யாருமே கேள்வி கேட்க முடியாது என்றார்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*