வாழைச்சேனை அந் நூர் கல்வி கலாசார அபிவிருத்தி அமைப்பினால் மாணவர் கொளரவிப்பு நிகழ்வு

0
156

(கல்குடா செய்தியாளர்) 

வாழைச்சேனை அந் நூர் கல்வி கலாசார அபிவிருத்தி அமைப்பு முதல் தடவையாக ஏற்பாடு செய்துள்ள சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு நாளை (05.01.2017) பிற்பகல் 02.00 மணிக்கு அந் நூர் தேசிய பாடசாலை பிரதான மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

அமைப்பின் தலைவர் எம்.எச்.எம்.நியாஸ் தலைமையில் இடம் பெறவுள்ள மாணவர் கௌரவிப்பு நிகழ்வில் பிரதம அதிதிகளாக கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் மற்றும் மட்டக்களப்பு மத்தி வலய கல்வி பணிப்பாளர் ஏ.எஸ்.இஸ்ஸதீன் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதுடன் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்ஷேய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி, தேசிய நீர் வழங்கள் வடிகாலமைப்பு சபையின் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய முகாமையாளர் பொறியலாளர் டி.ஏ.பிரகாஸ், கலாநிதி அருஸ் சரீப்தீன் (நளீமி), கோறளைப்பற்று பிரதேச சபை செயலாளர் ஏ.தினேஸ் குமார், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.எஸ்.பெறமுன உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந் நிகழ்வில் 2017ம் வருடம் கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் 2017ம் ஆண்டு தரம் ஐந்து புலமை பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களும் கொளரவிக்கப்படவுள்ளதாக அமைப்பின் தலைவர் எம்.எச்.எம்.நியாஸ் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here