ஒன்பது எருமை மாடுகளை ஏற்றி வந்த லொறி வாழைச்சேனை பொலிஸாரிடம் மாட்டிக்கொண்டது!

0
171

(கல்குடா செய்தியாளர்) 

சட்ட விரோதமான முறையில் எருமை மாடுகளை ஏற்றி வந்த லொறியை கைப்பற்றியுள்ளதுடன் அதன் சாரதியை சந்தேகத்தின் பேரில் நேற்று (வெள்ளிக்கிழமை) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.

ரிதிதென்ன பிரதேசத்தில் இருந்து கல்முனை பிரதேசத்திற்கு ஒன்பது எருமை மாடுகளை ஏற்றி வந்த லொறியை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை கைப்பற்றியுள்ளதுடன் அதன் சாரதியை சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்ட விரோத சம்பங்களை தடுக்கும் நோக்குடன் விஷேட பொலிஸ் குழுவினர் செயற்பட்டு வருவதாகவும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here