சம்மாந்துறை தாருஸ்ஸலாமில் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு

0
155

(அபூ அம்றா) 

சம்மாந்துறை தாருஸ்ஸலாம் முஸ்லிம் மகாவித்தியாலயத்தில் கல்வி பயிலும் வறிய மாணவர்கள் ஒரு தொகையினருக்கு இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு05.01.2018 வெள்ளிக்கிழமை மாலை 4.00 மணிக்கு பாடசாலை கேட்போர் கூடத்தில் அதிபர் எம். அமீர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

வீல்ஸ் லங்கா நிறுவனத்தின் உரிமையாளர் அல்ஹாஜ் இம்தியாஸ் அவர்களின் நிதியொதுக்கீட்டில் சர்வதேச இஸ்லாமிய நிவாரண அமைப்பின் இலங்கைக்கிளை செயலாளர் அஷ்ஷெய்க் எம். உவைஸ் அவர்களின் ஏற்பாட்டின் மூலம் வழங்கப்பட்ட பாடசாலை கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வில் வாழைச்சேனை கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் பொருளாதாரஅபிவிருத்தி உத்தியோகத்தர் எஸ்.எச்.எம்.அறபாத் -ஸஹ்வி பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

இந்நிகழ்வின் சிறப்பு பேச்சாளராக ஓட்டமாவடி – தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அறபுக்கல்லூரி விரிவுரையாளர் அஷ்ஷெய்க் பௌமி- ஸலாமி உள்ளிட்ட சம்மாந்துரை தாருஸ்ஈமான் கல்வி நிறுவனத்தின் அதிபர் இப்றாஹீம் மதனி, தாருஸ்ஸலாம் பாடசாலையின் ஆசிரியர்கள் பிரதி அதிபர்கள் ஆகிய முக்கியஸ்தர்களும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here