மீராவோடை கிழக்கு, மேற்கு வட்டார வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற மக்கள் சந்திப்பு

Spread the love

(எம்.ரீ. ஹைதர் அலி)

மட்டக்களப்பு மாவட்டத்தின், உள்ளுராட்சி சபைத் தேர்தலில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக சுயேட்சைக் குழு – 01, ஒட்டகச் சின்னத்தில் மீராவோடை கிழக்கு வட்டாரத்தில் போட்டியிடும் முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், சமூக சேவையாளரும், ஆசிரியருமான எஸ்.ஏ. அன்வர் மற்றும் மீராவோடை மேற்கு வட்டாரத்தில் போட்டியிடும் தொழிலதிபரும், சமூக சேவையாளருமான ஐ.எல். பதுருதீன் இரு வேட்பாளர்களையும் ஆதரித்து 2018.01.05ஆம்திகதி – வெள்ளிக்கிழமை மக்கள் சந்திப்பொன்று இடம்பெற்றது.

கோறளைப்பற்று மேற்கு முன்னாள் பிரதேச சபை உறுப்பினரும், சமூக சேவையாளருமான அல்ஹாஜ். ஏ.எல். அலியார் (ஜே.பீ) தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும், கல்குடாத் தொகுதி அமைப்பாளரும், பட்டயக் கணக்காளருமான அல்ஹாஜ். எச்.எம்.எம். றியாழ் அவர்கள் கலந்துகொண்டார்.

மேலும், இந்நிகழ்வின் பேச்சாளர்களாக வட, கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினரும், மூத்த எழுத்தாளருமான எல்.எல்.எம். ஹனீபா, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினரும், ஆசிரியருமான எஸ்.ஐ. முஹாஜிரீன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மட்டக்களப்பு மாவட்ட கொள்கை பரப்புச் செயலாளர் எச்.எம்.எம். பாக்கீர் ஆகியோரும் கலந்துகொண்டதுடன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று இரு பிரதேச சபைகளுக்கும் போட்டியிடும் ஏனைய வேட்பாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*