கல்முனை மத்திய கடற்கரை வீதியினை காபட் வீதியாக புனரமைக்கும் வேலைத்திட்டம்.

0
59

(அகமட் எஸ். முகைடீன்)

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸின் வேண்டுகோளுக்கு அமைவாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் கல்முனை மத்திய கடற்கரை வீதியினை காபட் வீதியாக புனரமைக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று (6) சனிக்கிழமை மாலை கல்முனை றஹ்மானியா தைக்கா அருகாமையில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸ் இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்து குறித்த வேலைத்திட்டத்தினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.

இதன்போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

ஊரின் நடுப்பிரதேசத்தில் அமைந்துள்ள கல்முனை மத்திய கடற்கரை வீதியானது வடக்கு தெற்காக உள்ள எல்லைகளை இணைக்கின்ற பிரதான வீதியாக செயற்படுகிறது. இவ்வீதி குன்றும் குழியுமாக காணப்படுவதனால் மழைகாலத்தில் நீர் தேங்கி நிற்பதனால் இவ்வீதியில் போக்குவரத்தை மேற்கொள்ளும் பொதுமக்கள் மிகுந்த அசௌகரிகங்களை எதிர்நோக்குவது தொடர்பில் குறித்த பிரதேச மக்கள் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்ததனைத் தொடர்ந்து குறித்த வீதியினை காபட் வீதியாக புனரமைக்கும் இவ்வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here