தாருஸ்ஸலாமில் புதிய மாணவர்கள் வரவேற்பு.

வாழைச்சேனை – தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரியின் 2018ம் கல்வியாண்டுக்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு அண்மையில் கல்லூரி வளாகத்தில் நடை பெற்றது.

கல்லூரியின் முதல்வர் அஷ்ஷெய்க் எம்.பீ.எம். இஸ்மாயில் (மதனி) MA அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலாபீடத்தின் தலைவரும் கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் பொதுத்தலைவருமான அஷ்ஷெய்க் ஏ.எல். பீர் முகம்மட் (காஸிமி) MA அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன், ஜம்இய்யாவின் பொதுச் செயலாளர் அஷ்ஷெய்க் எஸ்.எச். அரபாத்( ஸஹ்வி) BA, கல்லூரியின் செயலாளர் அஷ்ஷெய்க் ஏ.எல்.முஸ்தபா (ஸலாமி) BA, மற்றும் நிருவாக சபை அங்கத்தவர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப்பலரும் கலந்து சிறப்பித்தனர்.

ஷரீயா மற்றும் ஹிப்ளு ஆகிய பிரிவுகளுக்கு வருடா வருடம் மாணவர்களை இணைத்து வரும் இக்கல்லூரி இவ்வருடமும் இரு கற்கைகளுக்குமாக 65 மாணவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

பாடசாலை கல்வியோடிணைந்த பாடத்திட்டத்தை மையப்படுத்திய தாருஸ்ஸலாம் கலாபீடதிலிருந்து கடந்த காலங்களிலும் இம்முறையும் க.பொ. த.(உஃதரப்) பரீட்சையினூடாக கணிசமான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியினைப் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*