ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் சில நாட்களில் தூக்கி எறியப்படலாம் அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்.

0
388

(செய்திளார் எம். ஐ. அஸ்பாக்)

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூர் ஆட்சி சபைகளுக்கான வேட்பாளர்களை அறிமுகப்படுத்தும் பொதுக் கூட்டமொன்று கல்குடா தொகுதிக்கான அமைப்பாளர் மௌலவி எம்.எம்.எஸ்.  ஹாறூன் ஸஹ்வி அவர்களின் பூரண ஏற்பாட்டில் நேற்று மாலை ஓட்டமாவடி எம்.பீ.ஸீ.எஸ்.  வீதியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஹிஸ்புல்லாஹ் கருத்துத் தெரிவிக்கையில் “நாங்கள் ஜனாதிபதி மைத்திரி பால ஸ்ரீசேனவின் கட்சியில்தான் போட்டியிடுகின்றோம் இன்னும் 3 அல்லது 4 வருடங்களுக்கு அவர்தான் இந்த நாட்டின் ஜனாதிபதி, இறைவனைத் தவிர வேறு எந்த சக்தியாலும் அவரை மாற்ற முடியாது. ஆனால் ரணில் விக்ரமசிங்க இன்னும் சில தினங்களில் தூக்கி எறியப்படலாம், ஐக்கிய தேசியக் கட்சி இன்னும் சில மாதங்களில் முகவரியே இல்லாமல் காணாமல் போகலாம்.

இந்த ஜனாதிபதியின் கட்சியில் வெற்றி பெறுகின்ற போதுதான் எங்களுடைய ஜனாதிபதி நிதி ஒதுக்கீடுகளைச் செய்வார். வெறுமனே குப்பைகளை அள்ளிக் கொண்டு வடிகான்களைத் துப்பறவு செய்ய வேண்டுமென்றால் நீங்கள் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்கலாம்.

ஆனால் உங்களுடைய பிரதேசம் நவீன நகரமாக கட்டியெழுப்பப்பட வேண்டுமானால். அபிவிருத்திகளால் அழகு படுத்தப்பட வேண்டுமானால் நீங்கள் அளிக்க வேண்டிய வாக்குகள் ஜானாதிபதியின் கட்சியான இந்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கு மாத்திரமே” என்று கூறினார்.

இதன் போது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும், பொது மக்களும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here