தேசிய அல்குர்ஆன் கிறாஅத், மனன போட்டிக்கு விண்ணப்பங்கள் கோரல்

0
233

 

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் 2018ஆம் ஆண்டுக்கான தேசிய ரீதியில் நடாத்தப்படும் தேசியஅல் குர்ஆன் கிறாஅத், மனனப் போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் தற்போது கோரப்பட்டுள்ளன.

இதற்கான போட்டிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் கொழும்பில் நடத்தப்படவுள்ளன. ஏழு பிரிவுகளாக நடத்தப்படும்இப்போட்டியில், முதல் 10 இடங்களைப் பெறுபவர்களுக்கு பணப்பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.

போட்டி விபரங்கள், விதிமுறைகள் உட்பட மேலதிக விபரங்களை நவமணி மற்றும் தினகரன் (08.01.2018)பத்திரிகைகளிலும் www.muslimaffairs.gov.lk என்ற திணைக்கள இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ளலாம்.

விண்ணப்பங்கள் ஏ4 தாளில் விண்ணப்பத்திற்கமைவாக தயாரிக்கப்பட்டு, தபால் உறையின் இடது பக்க மேல் மூலையில்தேசிய அல்குர்ஆன் ஓதல் கிறாஅத்/ மனனப் போட்டிகள் 2018 எனக்குறிப்பிடப்பட்டு, பணிப்பாளர், முஸ்லிம் சமயபண்பாட்டலுவல்கள் திணைக்களம், இல – 180, ரீ.பி. ஜயா மாவத்தை, கொழும்பு – 10 என்ற முகவரிக்கு 2018.01.28 ஆம் திகதிஅன்றோ அதற்கு முன்னரோ கிடைக்கக் கூடியவாறு பதிவுத் தபாலில் அனுப்பி வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

பெக்ஸ், ஈமெயில் மற்றும் நேரடியாக சமர்ப்பிக்கும் விண்ணப்பங்கள் எதுவும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here