ஓட்டமாவடியில் மக்கள் காங்கிரஸின் வேட்பாளர்கள் அறிமுக விழா.

0
105

(ஓட்டமாவடி எச்.எம்.எம். பர்ஸான்)

நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இம்முறை மட்டக்களப்பு மாவட்டம் கல்குடா தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியோடு இணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றது.

கோறளைப்பற்று மேற்கு மற்றும் கோறளைப்பற்று ஆகிய பிரதேச சபைகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் விழாவும், முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டமும் நேற்று 7ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஓட்டமாவடி பலநோக்கு கூட்டுரவுச் சங்க வளாகத்தில் மிகவும் சிறப்பான முறையில் பெருந்திரளான மக்கள் மத்தியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஒவ்வொரு வேட்பாளர்களும் தங்களை அறிமுகம் செய்து கொண்டதோடு நாங்கள் எதுவித எதிர்பார்ப்புக்களுமின்றி நம் முஸ்லிம் சமுகத்துக்கு கிடைக்க வேண்டிய உரிமைகள், நம் சமுகத்தின் காணிப்பிரச்சனை போன்ற பல்வேறுபட்ட தேவைகளை நிவர்த்தி செய்வதற்காகத்தான் நாங்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் ஐக்கிய தேசிய முன்னணியோடு இணைந்து யானைச் சின்னத்தில் போட்டியிடுகின்றோம் என தங்களின் கருத்துக்களை தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வுக்கு பிரதம விருந்தினர்களாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகமும் இந்நாள் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவருமாகிய ஹசன் அலி அவர்களோடு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும் கிராமிய பொருளாதார பிரதியமைச்சருமான எம்.எஸ்.எஸ். அமீர் அலி ஆகியோர்கள் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் அரசியல் தொடர்பான பல்வேறுபட்ட உரைகளை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here