உயர்தர வணிகத்துறை கற்க விரும்பும் மாணவர்களுக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு

0
515

(ஆதிப் அஹமட்)

இம்முறை கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றி(2017) உயர்தரத்தில் வணிகத்துறையை கற்க விரும்புகின்ற மாணவர்களுக்கான துறை ரீதியான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு ஒன்றினை பின்வரும் விபரப்படி செரோ ஸ்ரீலங்கா மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்துள்ளது.

காலம்-10.01.2018

நேரம்-காலை 8.30 மணி

இடம்-IBMS கல்லூரி, காத்தான்குடி

இவ்வழிகாட்டல் கருத்தரங்கில் வளவாளர்களாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி A.M.M.முஸ்தபா(Phd) மற்றும் மட்டக்களப்பு உயர் தொழிநுட்ப கல்வி நிறுவனத்தின் கல்வி இணைப்பாளர் எஸ்.ஜெயபாலன்(M.Com) ஆகியோர் வளவாளர்களாக கலந்துகொண்டு விளக்கமளிக்கவுள்ளார்கள்.

எனவே மேற்படி கருத்தரங்கில் வணிகத்துறையை கற்க விரும்புகின்ற மாணவர்கள் தங்கள் பெற்றோர்கள் சகிதம் கலந்து சிறப்பிக்குமாறு அன்பாக அழைப்பு விடுக்கின்றோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here