அபிவிருத்தி மாயைகளை காட்டி வாக்குகள் பெற்ற காலம் மலையேறிப் போய்விட்டது!

0
165

(கல்குடா செய்தியாளர்) 

வெறுமனே அபிவிருத்தி மாயைகளை காட்டி வாக்குகள் பெற்ற காலம் மலையேறிப் போய்விட்டது என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் காத்தான்குடி நகர சபை தலைமை வேட்பாளரும், ஊடகவியலாளருமான ரீ.எல்.ஜௌபர்கான் தெரிவித்தார்.

காத்தான்குடி நகர சபைக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மயில் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதலாவது தேர்தல் பிரச்சார கூட்டம் காத்தான்குடி குட்வின் சந்தியில் நேற்று இரவு இடம் பெற்ற போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-

இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லா அவர்களே அபிவிருத்தி என்ற போர்வையில் முஸ்லிம் சமூகத்தை எத்தனை காலத்திற்கு ஏமாற்றப் போகின்றீர்கள். அபிவிருத்தி என்றால் வடிகாண் அமைப்பதும், வீதி அமைப்பதும், மலசலகூடம் கட்டுவது, கொந்துராத்து போடுவதுதானா உங்களுடைய அபிவிருத்தி.

அபிவிருத்தி என்றால் முஸ்லிம் சமூகத்திற்கான தேவைப்பாடுகள் இருக்கின்றன. கல்வி, காணி, வேலைவாய்ப்பு இவற்றை கண்டுகொள்ளாமல் வெறுமனே அபிவிருத்தி மாயைகளை காட்டி வாக்குகள் பெற்ற காலம் மலையேறிப் போய்விட்டது.

ஆரையப்பதி பிரதேசத்தின் செல்வா நகர் என்ற கிராம சேவகர் பிரிவில் 198 குடும்பங்கள் உள்ளது ஆனால் அதே பிரதேச செயலாளர் பிரிவில் பாலமுனை கிராமத்தில் 1348 குடும்பங்கள் உள்ளது. சாதாரணமாக நான்கு கிராம சேவகர்களாக பிரிக்க வேண்டிய பாலமுனை கிராமத்தை பிரிக்காமல் இந்த பிரதேசத்தில் முப்பது வருடகாலமாக அரசியல் செய்கின்றோம் என்று சொல்பவர்கள் எதைச் செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று புரியவில்லை.

முஸ்லிம் சமூகத்தினுடைய காணிப் பிரச்சனைகள் தீர்க்கப்படவில்லை. ஆனால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி அந்த கைங்கரியத்தை சாதாரணமாக செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here