சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இலங்கை எழுத்தாளரின் நூல் வெளியீடு

Spread the love

இன்று (10) இந்தியா சென்னையில் ஆரம்பமாகியிருக்கும் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் இலங்கை எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீப் தமிழில் மொழிபெயர்த்துத் தொகுத்திருக்கும் ‘எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்’ எனும் புதிய தொகுப்பு வெளியாகியிருக்கிறது.

தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட சர்வதேச புகழ்பெற்ற இருபத்திரண்டு ஆபிரிக்க எழுத்தாளர்களின் முப்பது உலகச் சிறுகதைகள் அடங்கிய பெருந் தொகுப்பாக அமைந்திருக்கும் இந் நூலை இந்தியாவின் பிரபல பதிப்பகங்களுள் ஒன்றான ‘வம்சி’ பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது.

மேற்கத்தேய ஊடகங்களில் நர மாமிசம் உண்ணும் காட்டுமிராண்டிகளாகவும், வன்முறையாளர்களாகவும், ஒழுக்கமற்றவர்களாகவும், மனிதாபிமானமற்றவர்களாகவும் சித்தரிக்கப்படும் ஆபிரிக்கர்களையே உலக மக்கள் கண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் உண்மையில் அவ்வாறானவர்கள் அல்ல. நேர்மையும், மனிதாபிமானமும் மிக்க அம் மக்களது நிஜ சொரூபத்தையே இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் விவரிக்கின்றன.

‘எனது தேசத்தை மீளப் பெறுகிறேன்’ எனும் இலங்கை எழுத்தாளர் எம்.ரிஷான் ஷெரீபின் இந்தப் புதிய தொகுப்பையும், இதற்கு முன்பு வெளிவந்திருக்கும் இவரது ஏனைய புத்தகங்களையும் இன்று முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை, சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சியில் வம்சி பதிப்பக அரங்குகள் 475, 476 மற்றும் காலச்சுவடு, டிஸ்கவரி புக் பேலஸ் அரங்குகளில் விலைக் கழிவுகளோடு பெற்றுக் கொள்ளலாம்.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*