பிணைமுறி விவகாரத்தை தேர்தலுக்கு சாதகமாக பயன்படுத்த சிலர் முயற்சி; அமைச்சர் ரவூப் ஹக்கீம்

Spread the love

உள்ளூராட்சி தேர்தல் நடை பெறவிருப்பதால் பிணைமுறி விவகாரத்தை ஒவ்வொருவரும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்துவதற்கு முயற்சிப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் நேற்று (10) பாராளுமன்றத்தில் குற்றம்சாற்றினார்.

பிணைமுறி விவகாரம் தொடர்பில் மக்கள மத்தியில் தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்துவதற்கும் முயற்சிகள் மேற்கொள்வதாக அவர் கூறினார்.

பிணைமுறி விநியோக சர்ச்சை குறித்து ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் விவாதிப்பதற்காக நேற்று (10) பாராளுமன்றம் விசேடமாக கூடியது. இதன்போது ஆளும் கட்சி எதிர்கட்சியினருக்கிடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் ரவூப் ஹக்கீம் இந்த கருத்துக்களை முன்வைத்தார்.

ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள விடயங்களில் ஒரு சில பிரிவுகள் ஊடகங்களின் ஊடாக வெளியாகியுள்ளன. இவை மக்களுக்குச் சென்றடைந்துள்ள நிலையில், தேர்தலை இலக்குவைத்து பிணைமுறி விவகாரத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்த சிலர் முயட்சிக்கின்றனர் என்றார். கிராமத்தில் ஆட்சியை அமைப்பதற்கான தேர்தலுக்கு முகங்கொடுத்துள்ள சூழ்நிலையில் சிலர் இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றார்கள் என்றார்.

Farsan Addalaichenai

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*