வறுமை நிலையிலுள்ள முன்பள்ளி மாணவர்களுக்கான உதவும் செயற்றிட்டம்

0
230

Education for all என்கிற எண்ணக்கருவிற்கு அமைய எமது முன்பள்ளியில் 10 வறுமை நிலையிலுள்ள மாணவர்களை இலவசமாக இணைத்துக் கொள்ளும் செயற்றிட்டம் ஒன்றை இவ்வாண்டில் ஆரம்பித்துள்ளோம்.

விவாகரத்துப் பெற்று தாய் அல்லது தந்தை அல்லது பாதுகாவலருடன் வாழும் மாணவர்கள், தந்தையை இழந்த மாணவர்கள், சமுர்த்தி உதவு தொகை பெறும் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் இத்திட்டம் மூலம் கற்பிக்கப்படவுள்ளனர்.

இணைத்துக்கொள்ளப்படும் பத்து மாணவர்களதும் இவ்வாண்டிற்கான கல்விச் செலவுகளை நாம் பொறுப்பேற்கவுள்ளோம்.

வாழைச்சேனை பிரதான குறுக்கு வீதியில் அமைந்துள்ள எமது சக்ஸஷ் முன்பள்ளியின் ஊடாக இந்த வாய்ப்பினை மாணவர்களுக்கு வழங்கவுள்ளோம்.

எமது முன்பள்ளியானது நவீன கலைத்திட்டங்களுடன், மொழித் திறனை விருத்தி செய்து மாணவர்களின் ஆளுமைவிருத்தியை மேம்பாடடைய செய்யும்வண்ணம் கற்பித்தல் இடம்பெறுகின்றது. பிள்ளைநேய வகுப்பறை, சிறுவர் பூங்கா, வீடியோ அறை போன்ற நவீன வடிவில் வடிவமைக்கப்பட்ட சூழலில், பயிற்றுவிக்கப்பட்ட ஆசிரியைகள் மூலம் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகள் இடம்பெற்றுவருகின்றன.

மேற்படி வரையறையிலுள்ள மாணவர்கள் இருப்பின் எம்முடன் நீங்கள் தொடர்புகளை ஏற்படுத்திதாருங்கள். உங்களது ஒத்துழைப்புக்கு அல்லாஹ் அருள்புரிவானாக!

தொடர்புக்கு – 0777349082

Success – Early Childhood Development Centre

No.169, Mani Cross Road

Valaichenai

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here