வாழ்வாதார உதவிகள் விரைவில் உங்களது வீட்டுக் கதவுகளைத் தட்டும்! – பிரதியமைச்சர் அமீர் அலி.

0
298

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)

கல்குடா பிரதேசத்திக்கு எங்களால் முடிந்தளவு என்னென்ன சேவைகள் செய்ய வேண்டுமோ அத்தனை விடயங்களையும் நாங்கள் செய்திருக்கின்றோம் இறைவன் துணையால் எதிர்வரும் காலங்களிலும் செய்யவுள்ளோம் உள்ளூராட்சி தேர்தல் எம்மை எதிர்நோக்கியுள்ளதால் தற்போதைக்கு அவ் உதவிகளை வழங்க முடியாதுள்ளது தேர்தலின் பிற்பாடு அதனை நாங்கள் செய்யவுள்ளோம் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீர் அலி தெரிவித்தார்.

கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய முன்னனியில் மீராவோடை மேற்கு வட்டாரத்தில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் எல்.ரீ.எம். புர்கானை ஆதரித்து அண்மையில் நடைபெற்ற கூட்டத்திலேயே பிரதியமைச்சர் மேற்சொன்னவாரு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் அங்கு பேசுகையில்,

மீன்பிடி சமூகம், விவசாய சமூகம், மகளிர், இளைஞர்களுக்கா வேலைவாய்ப்பு, பாடசாலைகள், வீதி அபிவிருத்திகள், வடிகான், அணைக்கட்டு போன்ற இன்னும்பல சேவைகளை முடிந்தவரை இந்தச் சமூகத்திற்கு செய்வதற்காகவுள்ளோம் . நாங்கள் கடந்த காலங்களில் கல்குடா பிரதேசத்தில் இரண்டு விடயங்களை மையப்படுத்தி அரசியலுக்கு வந்தவர்கள் ஒன்று கல்வி இரண்டாவது காணி இந்த ஊருக்கு ஒரு பாராளுமன்ற உறுப்பினர் இல்லாதிருந்திருந்தால் இந்தப் பிரதேசங்களுக்கு சில பாடசாலைகள் இருந்திருக்காது ஒரே நாளில் மூன்று பாடசாலைகளை நாங்கள் இம் மக்களுக்காக அமைத்துக் கொடுத்திருக்கின்றோம். உங்களுடைய பிள்ளைகள் சிறப்பாக கல்வியினை தொடர வேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் இவ்வாறான ஏற்பாடுகளை செய்துள்ளோம்.

நாங்கள் மட்டக்களப்பு மத்தி எனும் தனியான கல்விவலயம் கொண்டு வந்தோம் அதன் காரணமாக பாடசாலைகளுக்குத் தேவையான வழங்கள், கட்டுமானங்கள் போன்றவைகள் கிடைக்கப்பெற்றது. அது மாத்திரமல்ல தேசியத்திலேயே க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேற்றில் தொடர்ச்சியாக மூன்று முறை முதலிடம் பெற்று சாதனை படைத்த வரலாறும் உண்டு.

வரும் காலங்களிலும் இவ்வாறான அபிவிருத்திகளையும் நம் மக்களுடைய காணிப் பிரச்சினை தொடர்பான விடயங்களையும் வென்றெடுப்பதற்கு நாங்கள் களமிறக்கியுள்ள வேட்பாளர்களை நீங்கள் தெரிவு செய்து எங்களது இப்பயணத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here