கற்கை நெறி தெரிவு மற்றும் இணையவழி பல்கலைக்கழக விண்ணப்ப வழிகாட்டல் செயலமர்வு.

Spread the love

உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி தற்போது பல்கலைக்கழக விண்ணப்பத்திற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வெளியிடப்படும் நூலும் வெளியாகிவிட்டது. ONLINE மூலமாக இதை செய்ய வேண்டியுள்ளது.

இந்த விண்ணப்பம் பூர்த்தி செய்வதில் நீங்கள் மேற்கொள்ளும் ஒரு தவறு உங்கள் பல்கலைக்கழக அனுமதி நிராகரிக்கப்பட ஏதவாகவும் கூடும். எனவே விண்ணப்பித்தலில் அதிக கரிசணை அவசியம்.

கற்கை நெறி தேர்விலும் கற்கை நெறிகள் தொடர்பான தெளிவற்றவர்களாக மாணவர்கள் மேற்கொள்ளும் தவறுகள் பின்னாளில் அவர்கள் பெற்றுக்கொண்ட கற்கையில் விருப்பற்றவர்களாக காலம் கடத்துவதையும் காணமுடியும்.

எனவே, இதோ எங்கள் ஒரு முயற்சியாக இம்முறை பல்கலைக்கழகத்திற்காக விண்ணப்பிக்கும் கல்குடா பிரதேச மாணவர்களை வழிகாட்ட ஓர் இலவச செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

செயலமர்வில்…

1) Online விண்ணப்ப முறை

2) கணித, விஞ்ஞான, தொழினுட்ப, வர்த்தக, (கலை) பிரிவுக்கான கற்கைநெறிகள் விபரம்

ஆகியன துறை சார் வளவாளர்கள் கொண்டு விளக்கப்படவுள்ளன.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு பல்கலைக்கழக விண்ணப்ப முறை மற்றும் கற்கைநெறி தேர்வு தொடர்பிலான உங்கள் சந்தேகங்களுக்கான தெளிவுகளைப் பெற்றுக்கொள்ளுங்கள்.

காலம்: 14.01.2017 ஞாயிற்றுக்கிழமை

நேரம்: மு.ப. 8.30

இடம்: தாருஸ்ஸலாம் கேட்போர் கூடம், தாருஸ்ஸலாம் மஸ்ஜித்,மீராவோடை, ஓட்டமாவடி

ஏற்பாடு:
CYDA
CEYLON YOUTH DEVELOPMENT ASSOCIATION

For more: 0776116605, 0775154232

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*