JDIK யினால் தந்தையை இழந்த மாணவர்களுக்கு நிதியுதவி.

0
75

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)

கல்குடா ஜம்இயது தஃவதில் இஸ்லாமியாவினால் தந்தையை இழந்த மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி நேற்று (14) ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மீராவோடை தாருஸ்ஸலாம் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஏராளமான மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். மாணவ மாணவிகளுக்கான நிதியினை கல்குடா ஜம்இயது தஃவதில் இஸ்லாமியாவின் தலைவரும் கலாசார உத்தியோகத்தருமான அஷ்ஷெய்க் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி, அஷ்ஷெய்க் ரீ.எல். அமானுல்லாஹ் ஷர்கி, அஷ்ஷெய்க் எம்.ரீ. அப்துர்ரஹ்மான் அஸ்ஹரி, அஷ்ஷெய்க் யூ.எல்.எம்.சாஜஹான் நஹ்ஜி ஆகியோர்கள் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here