ஆசிய அபிவிருத்தி வங்கியின் 1900 மில்லியன் நிதியில் கல்முனை மாநகரம் அபிவிருத்தி

0
304

(றியாத் ஏ. மஜீத்)

ஆசிய அபிவிருத்தி வங்கியின் 1900 மில்லியன் நிதியில் கல்முனை மாநகரம் அபிவிருத்தி செய்யப்படும் என விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

இச்செயற்திட்டம் சம்பந்தமாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் மாநாடு இன்று (19) வெள்ளிக்கிழமை விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தலைமையில் கல்முனை மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு விளக்கமளிக்கையில்,

இலங்கையிலுள்ள உள்ளுராட்சி மன்றங்களில் கல்முனை மாநகர சபை பல்வேறு வகையில் முக்கியத்துவ மிக்க பிரதேசமாக திகழ்கின்றது. இந்த நல்லாட்சி அரசு மலர்வதற்கு அதிகூடிய பங்களிப்பு வழங்கிய பிரதேசங்களில் ஒன்றாகவும் இம்மாநகர சபைப் பிரதேசம் அடையாளப் படுத்தப்படுகின்றது.

அழகிய ஓர் திட்டத்தின் அடிப்படையில் கல்முனை மாநகர் அபிவிருத்தி செய்யப்படும். இசாய்ந்தமருதுஇ மருதமுனைஇ நற்பிட்டிமுனைஇ பாண்டிருப்பு, மற்றும் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட அனைத்து பிரதேசங்களும் நவீன ரீதியாக வரலாறு காணாத வகையில் அபிவிருத்தி செய்யப்டும். இவ் அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் அடுத்த 2020 ஜனவரிக்கு முன் ஓர் புதுப்பொலிவுடன் கல்முனை நகர் அபிவிருத்தி அடையும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

இலங்கையில் பல அபிவிருத்தி திட்டங்கள் ஆசிய அபிவிருத்தி வங்கி ஊடாக மேற்கொள்ளப்பட்டது. நகர திடடமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் மூலம் பேராசிரியர் மாகநாம தலைமையில் ஓர் குழு கல்முனை-சாம்மாந்துறை ஒருங்கிணைந்த அபிவிருத்தி திட்டம் தொடர்பான ஆய்வை மேற்கொண்டது.. குறிப்பாக கண்டி திருக்கோணமலை பெரும் நகரங்கள் பாரிய அபிவிருத்தி செய்ய உள்ளுராட்சி மாகாண சபை அமைச்சின் மூலம் உள்வாங்கப்பட்டது. இதில் கல்முனை நகரம் உள்வாங்கப்பட வேண்டும் என உள்ளுராட்சி மாகாண அமைச்சிடம் ஓர் கோரிக்கை விடுத்தேன்.

நாட்டிலுள்ள ஒவ்வொரு நகரும் தெரிவு செய்யப்பட்டு உள்ளுராட்சி அமைச்சினால் அபிவிருத்தி திட்டங்கள் மேற்க்கொள்ளப்படவுள்ளது. அதில் கிழக்கு மாகாணத்தில் 3 நகரங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளது.. இதற்காக ரூபா 1900 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

“இரண்டாம் நிலை நகரங்களின் அபிவிருத்தி திட்டம்” மூலம் 25 உள்ளூராட்சி மன்றங்களில் அம்பாறை மாவட்டத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட ஒரே ஒரு மாநகர சபையாக கல்முனை மாநகர_சபை திகழ்கின்றது. இது கூடிய சனத்தொகை செறிவு கொண்ட பிரதேசம் என்ற ரீதியில் இத்திட்டத்தினுள் உள்வாங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இத்திட்டத்தின் மூலம் சுகாதாரத்துறையிலுள்ள வைத்தியசாலைகள் அனைத்தும் நவீன ரீதியாக அபிவிருத்தி செய்யப்படவுள்ளதுடன்இ கல்முனை மாநகரத்தில் விளையாட்டு மைதானங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. குறிப்பாக கல்முனை சந்த்தான்கேணி மைதானத்தை பல வசதிகள் கொண்ட சர்வேதச மைதானமாகவும் மற்றும் ஏனைய பாடசாலை மைதானங்கள் மேலும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன .மற்றும் கிராமியப் பாதைகள் அபிவிருத்தி, உலக வங்கியின் ஊடாக காப்ரட் வீதிகள் ஆரம்பிக்கப்படும் என்றார்.

மேலும் இத்திட்டத்தை கொண்டுவந்த ஜனாதிபதி மற்றும் பிரதமர் மற்றும் இத் அபிவிருத்திக்கு நெறிப்படுத்திய அமைச்சர் ரவூப் ஹக்கீம் இமற்றும்
இதற்கான வழிகாட்டல்களை வழங்கிய மாகாண சபைகள் உள்ளுராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா, அமைச்சின் செயலாளர் திரு.எச்.டி கமல் பத்மசிறி, அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம்.நயீமுதீன் ஆகியோருடன் இதற்காக செயற்பட்ட கல்முனை மாநகர சபை ஆணையாளர் ஜே.லியாகத் அலி மற்றும் அவரோடு இணைந்த பணியாற்குழாமும் பாராட்டப்பட வேண்டியோராவர். அத்துடன் இதற்காக இணைந்து செயற்பட்டு வரும் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளர், பிரதம செயலாளர் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் உத்தியோகத்தர்களுக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றேன் எனவும் இச்செயற்திட்டம் முழுமையாக நடைமுறைப்படுத்தி ஒன்றிணைந்த கல்முனை அபிவிருத்தி திட்டத்தை வெற்றியடையச் செய்ய அனைவரும் இணைந்து செயற்பட முன்வர வேண்டும் என்றார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here