மாவடிச்சேனை அல்-இக்பாலில் தரம்-01 மாணவர்களை வரவேற்று பாடசாலைக்கு உள்ளீர்ப்புச் செய்யும் “ஏடு தொடக்க விழா”

0
192

ஓட்டமாவடி கல்விக் கோட்டத்திலுள்ள மாவடிச்சேனை அல்-இக்பால் வித்தியாலயத்தில் தரம்-01 மாணவர்களை வரவேற்று பாடசாலைக்கு உள்ளீர்ப்புச் செய்யும் “ஏடு தொடக்க விழா” வெகு சிறப்பாக அதிபர் யூ.எல்.எம்.ஹரீஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

புதிய மாணவர்களை தரம்-02 மாணவர்கள் மாலையிட்டு வரவேற்றதுடன் இனிப்புக்களை வழங்கி மகிழ்வித்தனர். இரு வகுப்பாரும் தேசியக் கொடியை ஏந்தி சுதந்திர இலங்கைக்கு மரியாதை வழங்கியது மட்டுமல்லாது அணிவகுத்து கேட்போர்கூடத்திற்குச் சென்று கலைநிகழ்ச்சிகளிலும் பங்கேற்றனர்.

இலவசப்பாடப்புத்தகங்கள் அங்கு மாணவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்ட அதேவேளை மாவடிச்சேனை கிராமிய அபிவிருத்திச்சங்கத் தலைவர் முஹம்மத் தாஹிர் அவர்களினால் தரம்-01 மாணவர்களுக்காக அன்பளிப்புச் செய்த கற்றல் உபகரணங்களும் அங்கு வழங்கி வைக்கப்பட்டன. முன்னோர் கல்வியை ஞாபகப்படுத்தும் முகமாக மண்திட்டில் மாணவர்களுக்கு அடிப்படை எழுத்துக்கள் பயிற்றுவிக்கப்பட்டன.

இந்நிகழ்வின் அதிதிகளாக பாடசாலை மேம்பாட்டு இணைப்பாளர் ஏ.எல்.ஏ.சலாம், எழுத்தாளர் ஓட்டமாவடி அறபாத், மாவடிச்சேனை ஜும் ஆப்பள்ளிவாயல் பேஷ் இமாம் ஜிப்ரி அஸ்ஹரி, வாழைச்சேனை ஆதாரவைத்தியசாலையின் கதிரியியக்கவியலாளர் சிப்லி, கிராமசேவகர் ஏ.ஜஃபர், ஓட்டமாவடி ரெயின் போ சேவிஸ் முகாமைத்துவப் பணிப்பாளர் நஜீத், முன்பள்ளி ஆசிரியைகளான நூறுல் நயீமா, ரகீபா ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here