ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுத்தீன் போன்று ஏமாறுபவன் நானல்ல! – மனோ கனேசன்

0
235

(அஷ்ரப் ஏ சமத்)

முஸ்லிம் காங்கிரஸ் தலைவா் ரவுப் ஹக்கீம் அ.இ. ம.காங்கிரஸ் தலைவா் றிசாத் பதியுத்தீன் போன்று ஏமாறுபவன் நானல்ல – நான் தலைநிமிா்ந்து வாழும் தமிழன். தழிழன் என்ற அகங்காரம் என்னுள் உள்ளது. நான் எனது மக்களுக்காகவே எனது மக்களிள் உரிமைக்காக போராடுகின்றேன். – என அமைச்சா் மனோ கனேசன் தெரிவித்தாா்.

ஊடகவியலாளர் டன்ஸ்டன் மணியின் சிறுகதைத் தொகுப்பான ‘இன்னும் பெயர் வைக்கல’ நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு பிரதம தபால் நிலைய கேட்போர்கூடத்தில் நடைபெற்றபோது

இந் நிகழ்வில் பிரதம அதிதியகாக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சா் மனோ கனேசன் மேற்கண்டவாறு உரையாற்றினாா்.

அங்கு தொடா்ந்து உரையாற்றிய அமைச்சா் தெரிவித்தாவது –

முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அ.இ.ம காங்கிரஸ் கட்சிகளின் வேட்பாளா்கள் கொழும்பில் மாநகர சபைக்காக ஐ.தே கட்சியின் .பட்டியலில் போட்டியிட கையெழுத்திட்டாா்கள் ஆனால் அடுத்த நாள் இரவு ரவி கருநாநாயக்க அதனை டிபெக்ஸ் இட்டு அழித்து விட்டு அவரது டுத்.தே.கட்சியின் வேட்பாளா்களை பட்டியலில் சோ்த்துவிட்டாா் . இது எனக்கும் நடக்கும் என்று எனக்கு முன்பே தெரியும் அதற்காகவே நான் இத்தனை வேட்பாளா்கள் கேட்டேன் அதனை அவா்கள் தரமுடியாது என்றாா்கள். நானும் ஒன்று இரண்டு பெயரைக் கொடுத்து விட்டு இருந்திருந்தால் கொழும்பில் எமது அடையாளம் இல்லாமல் போகியிருக்கும் அதற்காகவே – எனது வழி தனி வழி என்று ஒருமித்த முற்போக்கு முன்னணி என்று ஏணிச் சின்த்தில் போட்டியிடுகின்றேன்.

கொழும்பு என்பது சிறுபாண்மை இனங்கள் 62 வீதம் வாழும்  நகரம். நாம் இணைந்து கொழும்பை காப்பாற்ற வேண்டும். கொழும்பில் ்இருந்து ஜெயவா்த்தன புர தலைநகரமாக்கிவிட்டாா்கள் இருந்தும் நாம் எமது அடையாளங்களை காப்பாற்ற வேண்டும். இவ்வாறு நாம் விட்டுக் கொடுத்து ஏமாந்து சென்றால் நமது முகவரியை இல்லாமால் செய்து விடுவாா்கள்.

நான் கேகாலையில்  பிறந்து களனி ஆற்றில் குழித்து கண்டியில் வாழ்ந்து வட கொழும்பு கொச்சிக்கடை கொட்டாஞ்சேனையில் வாழும் தமிழா்களின் நாயகன் – நான் முதன் முதலாக வ ட கொழும்பிற்கு வந்து தோ்தல் கேட்டேன். அப்போது ஐ .தே.கட்சி முன்னாள் பாராளுமன்ற உறுப்பிணா் நிலந்த பெரேரா வுடன் நானும் வட கொழும்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஆனேன். அப்போது அங்கு வாழ்ந்த சிறிய கடைகளை தோட்டங்களை மத்தியதர வா்ககத்தினரை தொழிலாளா்களை வாழ்ந்த சிறிய கடைகளை முன்னாள் பா உறுப்பிணா் நிலந்த பெரேரா முற்றுகையிட்டு அகற்றினாா்.

என்னிடம் கொட்டாஞ்சேனை – கொச்சிக்கடை தமிழா்கள் ஓடிவந்தாா்கள். நான் கொட்டாஞ்சேனை பொலிஸ் ஓ.ஐ .சியிடம் சென்று ஏன் இதனைச் செய்கின்றீா்கள் எனக் கேட்டேன் அவருக்கு நான் பா.ம  உறுப்பினர்  கூட தெரியாது. எனது மக்களுடன் போய் சென்று அவா்கள் நாட்டிய கம்பங்களை எடுத்து வீசினேன். என்னுடன் வட கொழும்பு தமிழா்கள் இளைஞா்கள் இணைந்து சகல கம்பங்களையும் கழற்றி வீசினாா்கள்.அதிலிருந்து ஐ.தே. கட்சியின் பா.ம உறுப்பினா் நிலந்த பெரேரா போனவா் தான் வட கொழும்புக்கு வரவே இல்லை. தற்பொழுது வட கொழும்பு எனது கட்டுப்பாட்டில் உள்ளது. கொழும்பில் தமிழா்க்ள அதிகமாக வாழும் பிரதேசம் வட கொழும்பு தான் வெள்ளவத்தை பிரதேசம்அல்ல . இந்த தமிழன் இருக்கு மட்டும் வட கொழும்பில் யாறும் அங்கு கைவைக்க முடியாது.  (இந்த நிகழ்வுக்கு இங்கு இருக்கின்ற டாண்ஸ்டன் மனியின் தந்தை சாட்சி கூறுவாா் அன்று அவரும் இருந்தாா்) என மனோ உரையாற்றினாா்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here