பொத்துவில் ஆசிரியர்களின் அவலங்கள் தொடர்பில் அமைச்சர்றிசாத்துடன் பேச்சுவார்த்தை!

0
180

(சப்னி அஹமட்) 

அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான கௌரவ  அல்ஹாஜ் றிஷாட் பதியுதீன் அவர்கள் இன்று பாலமுனை மண்ணில் பொத்துவில் பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்களை சந்தித்துப் பேசினார்.

பொத்துவில் ஆசிரியர்களின் கோரிக்கை ஒன்றினை தென்கிழக்கு ஆசிரியர் ஒன்றியத்தினால் நேற்று நண்பகல் 12 மணிக்கு பாலமுனையில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.

சுமார் 120 மேற்பட்ட பெண் ஆசிரியர்கள் உட்பட 30 க்கும் மேற்பட்ட ஆண் ஆசிரியர்களும் சுமார் 150 கிலோ மீற்றருக்கும் அப்பால் பயணம் செய்ய வேண்டிய அவலை நிலை இருப்பதாகவும் இந்த பயணத்தின் போது போக்குவரத்தினால் ஏற்படும் பிரச்சினைகளையும் எடுத்துக்கூறியும் தற்போது புதிதாக எழுந்துள்ள கைவிரல் அடையாள கையொப்பம் தொடர்பில் வெளி ஊர்களில் இருந்த ஆசிரியர்கள் எதிர்கொள்ளும் ஆசிரியர்கள் பெரும் அவலங்கள் தொடர்பிலும் மகஜர் ஒன்றினையும் கையளித்தனர்..

இதன்போது, இது தொடர்பில் உரியவர்களுடன் கலந்துரையாடல் செய்வதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here