நமது சமுதாயத்தினை காப்பாற்றுவதற்காகவே போராடி வருகிறோம்!

0
298

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)    

நல்லாட்சி அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் தீர்வுத் திட்டத்திலே நாங்கள் எவ்வாறாவது இந்த அரசுக்குள்ளே இருந்து கொண்டு இந்த சமுதாயத்தை எப்படி காப்பற்றுவது என்றும் இந்த தீர்வுத்திட்டத்திலே நமது சமுதாயத்திற்கு அடிமை சங்கிளியை போட்டு விடாமல் காப்பாற்றுவதற்காக போராடி வருகிறோம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஸாட் பதியுதீன் தெரிவித்தார்.

ஓட்டமாவடி மற்றும் கோறளைப்பற்று பிரதேச சபைகளுக்காக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மீறாவோடையில் நேற்று (21.01.2018) இரவு இடம் பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில்கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற் சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்.

நமது சமுகத்தில் உள்ள மொத்த வியாபாரியை வாக்காளர்கலாகிய உங்களுக்குத் தெரியும் பதினேழு வருடாகாலமாக தனது தலைமைப்பதவிக்காக மாத்திரம் செயற்பட்டுக் கொண்டு பேசிக்கொண்டு இருக்கின்ற எந்த நேரமும் தனது தலைமைப்பதவியை மாத்திரம் சிந்தித்துக் கொண்டு இருக்கின்ற அந்த தலைவர் வெளிநாட்டு சக்திகளுக்கு அடிமைப்பட்டவராக இருக்கிறார் அவர் ஒரு போதும் சமுகத்தின் பிரச்சினை தொடர்பாக வாய் திறக்கமாட்டார்.

வடக்கும் கிழக்கும் பிரிந்திரிக்க வேண்டுமா அல்லது சேர்ந்திருக்க வேண்டுமா என்று அவரிடத்திலே கேட்டால் அவரிடத்திலே இருந்து எந்த பதிலும் வராது அது தொடர்பாக அவர் வாய்திறக்க மாட்டார் அவரது வாய்கு வெளிநாட்டு சக்திகளும் மற்றய சக்திகளும் பூட்டு போட்டு விட்டார்கள் அதனால் அது தொடர்பாக அவர் வடக்கு கிழக்கு பிரிப்பு தொடர்பாக வாய் திறக்க மாட்டார்.

மறைந்த தலைவர் அஷ்ரபின் பெரும் தியாகத்தால் உறுவாக்கப்பட்ட அந்த கட்சி இன்று அந்த தியாகியுடைய கொள்கை அந்த கட்சியிலே இல்லை அக் கட்சியிலே தற்போது மக்களிடம் எவ்வாறு வாக்குகளை பெறலாம் எவ்வாரு மக்களை ஏமாற்றலாம் என்ற சிந்தனை மட்டுமே கட்சி தலைமையிடம் உள்ளது அதைத்தான் அவரது தொண்டர்களும் செய்து கொண்டு இருக்கின்றார்கள்.

ஆயுதம் ஏந்துமாறு எமது முஸ்லீம் தலைவர்கள் சொல்லவில்லை டொக்கர் ரீ.பி.ஜாயா தொடக்கம் பெரும் தலைவர் அஷ்ரப் வரை எமது சமுதாயத்தை ஆயுத கலாச்சாரத்திற்கு இட்டுச்சொல்லவில்லை விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவருக்கு முன்னர் பல தலைவர்கள் ஆயுத போரட்டத்தினால்தான் நாடு பெறலாம் சமஷ்டி பெறலாம் என்றுநம்பிக்கை கொண்டு கழுத்திலே சயினட் வில்லைகளை கட்டிக்கொண்டு போராடிய வரலாறு இந்த நாட்டிலே இருக்கின்றது.

எமது சமுகம் எந்த ஒரு கட்டத்திலும் ஆயுதத்தின் மீது நம்பிக்கை வைக்கமால் ஜனநாயகத்திற்கு விரோதமாக செயற்பட்ட சமுகமல்ல அடித்த பொழுதும் கொன்ற பொழுதும் வாழைச்சேனையிலே எமது இரண்டு ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்வதற்கு தராமல் எரித்த பொழுதும் பொறுமை கார்த்த சமுகம் நாங்கள்.

இந்த நாட்டிலே ஜே.வி.பி மற்றும் தமிழ் சகோதரரகளின் போராட்டத்தால் எமது நாடு எத்தனை பில்லியன்களை நாசமாக்கியது என்பதை ஒவ்வொருவரும் யோசித்துப்பாருங்கள் சுதந்திரம் கிடைத்த காலத்திலே ஜப்பானுக்ககு அடுத்தாக எமது நாடு பொருளாதாரத்திலே சிறப்பாக விளங்கியது ஆயுத போராட்டம்தான் எமது நாட்டை பொருளாதார ரீதியில் பின்னடைவுக்கு கொண்டு வந்தது என்றும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here