கருத்துச் சொல்லப் போய் மூக்குடைபட்ட முட்டாள் அனந்தி

0
210

(பாரூக் ஷிஹான்)  

யாழ்ப்பாணத்தில் 9 ஆவது வருடமாக நடைபெறும் பன்னாட்டு வர்த்தகக் கண்காட்சிக்கு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையோ தன்னையோஅழைக்கவில்லை என்ற விபரம் தெரியாமல் கருத்துக்கூறி மூக்குடைபட்டுக்கொண்டார் வடக்கு மாகாண வர்த்தக கைத்தொழில்துறை அமைச்சர் அனந்தி சசிதரன்.

நேற்றுக்காலை அமைச்சர் அனந்தி சசிதரன் பத்திரிகையார் சந்திப்பு ஒன்றைத் தனது அலுவலகத்தில் நடத்தினார் யாழ்ப்பாணத்தில் நடக்கும் பன்னாட்டு வர்த்தக கண்காட்சிக்கு வடக்கு மாகாண சபையை புறந்தள்ளி நடத்தப்படுவதாக அவர் குற்றம் சுமத்தியதுடன் நாம் தொடர்ச்சியாக நிகழ்வில் புறக்கணிக்கப்பட்டு வருகின்றோம். எம்மை அழைக்காவிட்டாலும் முதலமைச்சரையாவது மரியாதை நிமித்தம் அழைத்திருக்கலாம் என்றார்.

எனினும் நேற்று மாலை யாழ்ப்பாணம் கிறீன்கிறாஸ் விடுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார் யாழ்.வர்த்தக தொழில்துறை மன்றத்தின் தலைவர் வி.கே.விக்னேஸ் 9 ஆவது பன்னாட்டுக் கண்காட்சிக்கு முதன்மை விருந்தினராக வடக்கு மாகாண சபை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைத் தான் அழைத்திருக்கின்றோம். என்று தெரிவித்ததுடன் அது தொடர்பான அழைப்பிதழை முதல்வரின் இல்லத்திற்கு நேரடியாக சென்று அவரிடம் கொடுத்து நிகழவுக்கு அழைத்துள்ளோம் என்றார்.

மேலும் அமைச்சர் அனந்தி சசிதரனுக்கு வர்த்தக துறையை முன்னேற்றும் நோக்கம் இல்லை என யாழ்.வர்த்தக தொழில்துறை மன்றத்தின் தலைவர் குற்றம் சுமத்தியுள்ளதுடன் இந்த கண்காட்சி வருடாந்தம் நடத்தப்படுகிறது. இதில் வடக்கு மாகாண சபைக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பாக வடமாகாண முதலமைச்சரை இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக நாங்கள் அழைத்துள்ளோம். ஏனைய வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கும் உரிய முறையில் அழைப்பு வழங்கப்பட்டுள்ளது.
நிகழ்வில் வடமாகாண சபை புறக்கணிக்கப்பட்டுள்ளது என்பதை நாங்கள் ஏற்றக் கொள்ள முடியாது. வட மாகாண சபைக்கான வர்த்தக அமைச்சர் பதவி ஏற்று எத்தனை மாதங்கள் கடந்து விட்டன.

இன்றுவரை அவர் வர்த்தக முன்னேற்றம் தொடர்பில் என்ன நடவடிக்கையினை எடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் வர்த்தக தொழில்துறை மன்றம் என்று ஒன்று உள்ளது என்பது அமைச்சருக்கு தெரியுமா? என்று கூட எமக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here