சபீக்கீன் இராஜினாமா சல்மானுக்கு பதவி வழங்கும் நாடகமா…??

0
208

( ஹபீல் எம்.சுஹைர் )

மு.காவிலுள்ளலவர்கள் தலை சிறந்த நடிகர்கள். அமைச்சர் ஹக்கீமின் நடிப்பை பற்றி வார்த்தகளால் சொல்லிவிட முடியாது. தேசியப் பட்டியல் என்ற ஒன்றை வைத்து, அவர் நடாத்திக்கொண்டிருக்கும் நாடகத்தை அவதானிக்கும் ஒருவரால், அவரது நடிப்புத் திறமையை துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.

சபீக் றஜாப்தீன், தனது முக நூலில் கிழக்கு மாகாண மக்களை இழிவுபடுத்தி ஒரு கருத்தை இட்டிருந்தார். அந்த கருத்தின் தாக்கம், அவரை அவரது சகல பதவிகளிளிலும் இருந்து நீக்கச் செய்துள்ளது. இவ்வாறான வார்த்தை பிரயோகங்கள் பாரதூரமானவை என்பது அனைவருக்கும் தெரியும். இது அவருக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை.

கிழக்கு மக்கள் பற்றிய கசடுகள், அவரது மனதில் நிறைந்திருந்தாலும், அதனை வெளிக்காட்டுவது அவருக்கு பாதகமானது. அதனை வெளிப்படுத்தாமல், எப்படி கிழக்கு மாகாண மக்களுடன் நடந்து கொள்ள வேண்டும் என, அவர் இத்தனை நாளும் நன்கு பயிற்சி பெற்றிருப்பார். அவர் மிக நீண்ட காலமாக மு.காவுடன் தொடர்பில் உள்ளார் அல்லவா? அது மாத்திரமல்ல, இத்தனை சீரியஸாக பதில் வழங்கும் அளவு சகோதரர் நிப்ராஸ் ஒரு பிரபலம் கூட இல்லை.

அப்படியானவர், ஒரு சிறிய முக நூல் கருத்துக்கு இப்படி பதிவிட்டிருப்பாரா? அதுவும் மிக நீண்ட விவாதங்களின் பின்னர் அல்ல. எடுத்த எடுப்பில் கூறியிருப்பாரா? இவர் இந்த கருத்தை கூறியிருந்த நேரம், மு.காவின் உயர்பீட உறுப்பினர் சல்மான், தனது பாராளுமன்ற உறுப்புருமையை இராஜினாமா செய்திருந்தார். அவருக்கு ஒரு முக்கிய பதவி வழங்க வேண்டிய தேவை அமைச்சர் ஹக்கீமுக்குள்ளது.

அவருக்கு வழங்கும் பதவியாக சபீக் ரஜாப்தீனின் பதவி குறிவைக்கப்பட்டிருக்கலாம். அவர் பதவியை இராஜினாமா செய்யும் போது ஒரு தேர்தல் நாடகத்தை நடாத்த திட்டமிடப்பட்டிருக்கலாம். இப்படியான ஒரு கருத்தை கூறினால், கிழக்கு மக்கள் கொதிப்பார்கள். உடனே அவருக்கு ஏதாவது தண்டனை வழங்கி, கிழக்கு மாகாண மக்கள் மீது, தான் பற்றுக்கொண்டவான் என்பதை நிரூபணம் செய்யலாம் என்ற திட்டம் அதில் இருந்திருக்கலாம்.

இதனை நிறுவும் விதமாக, உடனடியாக சபீக் ரஜாப்தீன் பதவி விலகியமை, அவ் இடத்துக்கு உடனடியாக சல்மான் நியமிக்கப்பட்டுள்ளமை, அதனை வைத்து மு.காவினர், தங்களுக்கு சார்பான பிரச்சாரங்களை சொல்லி வைத்தாப் போல் செய்கின்றமை உள்ளன. எதிர்வரும் கிழக்கு தேர்தல் மேடைகளில் அமைச்சர் ஹக்கீமின் பிரதான மக்களை திசை திருப்பும் கருப் பொருளாக, இது அமையும் என்றே பார்க்கப்படுகிறது. இன்னும் அமைச்சர் ஹக்கீமின் திருகு தாளங்களுக்கு கிழக்கு மக்கள் ஏமாந்துவிடக் கூடாது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here