கௌரவமளித்தலின் இலட்சணம்!

0
231

(எம்.எம்.ஏ.ஸமட்)

முஸ்லிம்கள் செறிவாக வாழும் அம்பாறை மாவட்டத்தின் பெரியநீலாவணை முதல் பொத்துவில் வரையான தென்கிழக்குக் கரையோரத்தின்; மத்திய பகுதியாக விளங்குவது ஒலுவில் பிரதேசமாகும்.

முஸ்லிம் தேசியத்தில்; தனக்கென ஓர் இடத்தைப் பதித்துக்கொண்ட முஸ்லிம் காங்கிரஸின்; அரசியல் பயணத்திற்கு தோள்;கொடுத்த கிழக்கு மாகாணத்திலுள்ள பிரதேசங்களில் இந்த ஒலுவில் பிரதேசத்திற்கும் பகிபங்குண்டு.

முஸ்லிம் காங்கிரஸின் பரிணாம வளர்ச்சியில் அட்டாளைச்சேனைப் பிரதேசசபைக்குட்பட்ட முக்கிய பிரதேசங்களாகவுள்ள அட்டாளைச்சேனை, பாலமுனை மற்றும் ஒலுவில் ஆகிய பிரதேச முஸ்லிம்களின் ஆதரவும், ஈடுபாடும், காலம் காலமாக நடைபெறும் ஒவ்வொரு தேர்தல்களிலும் இக்கட்சிக்கு அளிக்கப்படும் வாக்குகள் மூலம் பிரதிபலிக்கின்றன.
கடந்த 17 வருட காலங்களில் நடைபெற்ற பாராளுமன்ற, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களின் போது இப்பிரதேச மக்களின் 70 வீதமான வாக்குகள் முஸ்லிம் காங்கிரசுக்கு  அளிக்கப்பட்டிருக்கிறது. அதனால்தான், முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய தேசிய முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினராக இரண்டு வருடங்களுக்கு மேல் பதவி வகித்து கடந்த வாரம் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்துள்ள எம்.எச்.எம். சல்மானின் தேசிப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவி அட்டாளைச்சேனைக்கு வழங்கடவுள்ளதாக முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினரினால் இத்தேர்தல் காலத்தில்கூறப்பட்டு வருகிறது.

முஸ்லிம் காங்கிரஸும் கட்சிப் பற்றும்

இந்நாடு சுதந்திரம் பெற்றது முதல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தோற்றத்திற்கு முன்னரான காலப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்களில் குறிப்பாக கிழக்கு முஸ்லிம் வாக்காளர்களில் பெரும்பாலானோர் அரசியல் விழிப்புணர்வு பெறாதாவர்களாக இருந்திருக்கிறார்கள். எது எங்கே எப்படி நடக்கிறது? யார் கையில் எந்த அரசியல் அதிகாரம் இருக்கிறது? யார் யாருக்காக தேர்தலில் வாக்களிக்கச் சொல்லுகிறார்கள்? நாம் யாருக்காக வாக்களிக்க வேண்டும். நமது வாக்குகளின் பெறுமதியென்ன? நமது வாக்கினால் யார் நன்மை அடைகிறார்கள்?. யார் யாரை ஏமாற்றிப் பிழைப்பு நடத்துகிறார்கள் என்ற கேள்விகளை தங்களுக்குள் எழுப்பி விடைகானதவொரு அரசியல் சூழ்நிலையே கிழக்கு முஸ்லிம் பிரதேசங்களில்; காணப்பட்டிருக்கிறது.

இவ்வாறான அரசியல் சூழ்நிலையில், பெரும்பான்மையினக் கட்சிகளின் சலுகைகளை அனுபவித்துக்கொண்டிருந்த தென்னிலங்கை முஸ்லிம் தலைமைகளும், கிழக்கு முஸ்லிம் அரசியல்வாதிகளும் இப்பிரதேச மக்களைப் பகடைக்காய்களாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்ற யதார்த்தைப் புரியவைத்தவர் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தபாகத் தலைவர் மர்ஹும் அஷ்ரப் எனக் குறிப்பிடப்படுவதைத் தட்டிக்கலிக்க இயலாது.

1980களில் காணப்பட்ட அரசியல் சூழல்களின் யதார்த்த நிலை தொடர்பில் கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் எழுந்த மேற்படி வினாக்களுக்கு முஸ்லிம் காங்கிரஸின் உதயம் விடைகொடுத்தது என்பதையும் அதன் பரிணாம வளர்ச்சி அரசியல் விழிப்புணர்வை கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் தோற்றுவித்தது என்ற யதார்த்தத்தையும் மறுப்பதற்கில்லை. அதனால்தான், முஸ்லிம் காங்கிரஸ் மீது இப்பிரதேச மக்கள் இன்று வரை ஆதரவும் பற்றும் வைத்திருக்கிறார்கள்
அத்தோடு, அஷ்ரபின் உரிமை மற்றும் அபிவிருத்தி அரசியல் பயண வெற்றின் இரு பெரும் அடைவுகள்தான்; தென்கிழக்குப் பல்கலைக்கழகமும், ஒலுவில் துறைமுகமுமாகும். இவ்விரண்டும் நிறுவப்பட்டுள்ளமை இப்பிரதேசத்தில்தான். இவ்விரு நிறுவனங்களினாலும் இப்பிரதேசம் பிரபல்யம் பெற்றிருக்கிறது.

ஒரு சமூகத்தின் வளர்ச்சியில் கல்வியும், வாழ்வாதரமும் இன்றியமையாதது. இவ்விரண்டையும் சமூகத்திற்கு பெற்றுக் கொடுக்கும் நோக்கை இலக்காகக் கொண்டுதான் இவ்விரு நிறுவனங்ளையும்; தென்கிழக்கின் மத்திய பிரதேசமான ஒலுவிலில் அஷ்ரப் உருவாக்கினார்.
இவ்விரு நிறுவனங்கள் தொடர்பில் அவர்கொண்டிருந்த இலக்குகள் அவரது மரணத்தினால் அடையப்படவில்லை. ஆனால், இப்பிரதேசங்களில் தென்கிழக்கு பல்கலைக்கழகமும் துறைமுகமும், அனுகூலங்களையும் அவற்றோடு பிரதிகூலங்களையும்; ஏற்படுத்தியிருந்தாலும், ஒலுவில் எனும் பிரதேசம் தேசிய ரீதியாக கல்விக்கும், துறைமுகத்திற்கும் அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசமாக விளங்குகிறது.

எதிர்கால சந்ததியினரின் உயர் கல்வி அபிவிருத்தியையும், மக்களின் வாழ்வாதார விருத்தியையும் நோக்காகக் கொண்டு இவ்விரு நிறுவனங்களையும் ஒலுவில் பிரதேசத்தில் உருவாக்கிய அஷ்ரப் தனது ஓய்வு காலத்தை இம்மண்ணில் கழிக்க வேண்டும் என்ற இலக்குடன் ‘லீடர் ஹவுஸ்;’ என்ற பெயரில் இங்கு ஒரு வீட்டை கட்டி அவ்வீட்டின் 90 வீதமான கட்டட நிர்மாணப் பணிகளை நிறைவு செய்திருந்தார். இருப்பினும், அவரது அகால மரணம் அவர் கண்ட கனவைக் கலைத்தது.

இருந்தபோதிலும், இவ்வீட்டின் பின்னுரித்தை இம்மக்கள் சக்தியோடு வளர்த்தெடுத்த இக்கட்சிக்கே அவர் எழுதியும் வைத்துள்ளதாக அறிய முடிகிறது. கட்சியின் வளர்ச்சி நிதிக்காக அவரால் உருவாக்கப்பட்ட லோட்டஸ் நம்பிக்கை நிதியத்தின் பெயரில்தான் இந்த வீடும், வீட்டைச் சுற்றியுள்ள காணியும் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்காலக் கனவுகள் பலவேற்றோடு அவர் கட்டிய இவ்வீட்டின் உரிமை தொடர்பிலுள்ள யதார்த்த நிலையை உறுதிப்படுத்துவதற்காக முஸ்லிம் காங்கிரஸின் உச்ச பீட உறுப்பினர் ஒருவரிடம் கேட்டபோது “இவ்வீட்டினதும், காணியினதும் உரிமை நம்பிக்கை நிதியத்திற்கு இருப்பதாகவும், இந்நம்பிக்கை நிதியத்தின் தலைமைப் பதவி அஷ்ரபிடம் அவர் மரணிக்கும் வரை இருந்ததாகவும் குறிப்பிட்ட அம்முக்கியஸ்தர் இந்நிதியம் தொடர்பில் மேலதிக கருத்துக்கள் எதுவும் தெரிவிக்க விரும்பாத நிலையில், இவ்வீட்டின் சமகால நிலை குறித்த மக்களின் ஆதங்கம் கவனத்தில் கொள்ளப்படும் எனத் தெரிவித்ததை இங்கு பதிவிட வேண்டும்.

தான் எந்த மண்ணை நேசித்தனோ அந்த மண்ணியில் இறுதி நாட்களைக் கழிக்க வேண்டுமென்றெண்ணி அவர் ஒலுவிலில் கட்டிய ‘லீடர் ஹவுஸ்” தலைவர் இல்லத்தின் வரலாற்றுப் பின்னணி தொடர்பிலும், இவ்வீட்டின் தற்கால நிலை குறித்தும் ஒலுவில் பிரதேச முஸ்லிம் காங்கிரஸின் ஆரம்ப காலப் போராளி; ஒருவரிடம் வினைவியபோது, அவர் இவ்வாறு தெரிவித்தார் “அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னால் தவிசாளரும்,  மறைந்த தலைவர் அஷ்ரபின் நெருங்கி நண்பருமான ஒலுவிலைச் சேர்ந்த நூஹ் லெல்பை ஹாஜியாரினால் தலைவர் அஷ்ரபுக்கு இவ்வீடு கட்டுவதற்கான காணி வழங்கப்பட்டது.

நூஹ் லெப்பை ஹாஜியாரும், அஷ்ரபும் பள்ளித் தோழலர்கள். தோழமையின் நட்புக்காகவே இப்பெரும் நிலப்பரப்பை அவர் மறைந்த தலைவர் அஷ்ரபுக்கு வழங்கியிருந்தார். தலைவர் அஷ்ரப் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சட்ட பீடமொன்றை உருவாக்கத் திட்டமிட்டிருந்தார். அவரின் திட்டத்தின் பிரகாரம், தான் அரசியலிருந்து ஓய்வு பெறும் காலத்தில் இப்பல்கலைக்கழத்தின் சட்ட பீடத்திற்கு வருகை தரும் விரிவுரையாளராக குறித்த இந்த இல்லத்திலிருந்தே செல்வதற்கு அவர் கனவு கண்டிருந்ததார்.

இவ்வாறு எதிர்கால இலட்சிக் கனவோடு அவர் கட்டிய இவ்வீடு கரையான்களினதும், விசஜந்துகளினதும் வாழ்விடமாகவும், தேவையில்லாதவர்களின் தேவையற்ற விடங்களுக்குப் பயன்படும் மறைவிடமாகவும் காணப்படுகிறது. அத்துடன் இவ்வீட்டுக்காணி பற்றைக்காடகவும் காட்சியளிக்கிறது; என்று குறிப்பிட்ட அப்போராளி, இவ்வீட்டை மக்கள் பயன்பாட்டுக்கான பொது நிலையமாக மாற்றியமைப்பதற்கு இவ்வூர் பிரமுவர்கள் பலர் கடந்த காலங்களில் முயற்சித்தபோதிலும் அது கைகூடவில்லை என்றும் இவ்வீட்டையும் இக்காணியையும் மக்கள் நலனுக்காக மாற்றியமைக்கப்பட வேண்டுமென்றை கோரிக்கையையும் முன்வைத்ததைக் குறிப்பிட்டாக வேண்டும்.

அமைச்சரவை அமைச்சர், பிரதி அமைச்சர்; மாகாண சபை முதலமைச்சர், மாகாண அமைச்சர், உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் என பல பதவிகளை அஷ்ரப்; உருவாக்கிய கட்சியின் மூலம் பெற்றுக்கொண்டபோதிலும், இக்கட்சி இதுவரை காலமும் இவ்வீடு குறித்து அக்கறை செலுத்தாமல் இருந்ததைக் கொண்டு வழிகாட்டிய தலைவனுக்கு அளித்த கௌரவத்தின் இலட்சணையும் வாக்களித்து பதவி ஆசனங்களில் அமரச் செய்த இம்மாவட்ட மக்களுக்காக இக்கட்சியினால் புரியப்பட்ட அபிவிருத்திகளையும் உணர்ந்துகொள்ள முடியுமென அஷ்ரபின் அபிமானிகள் ஆதங்கப்படுவதில் நியாமில்லாமலில்லை.

ஏனெனில், முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைமை கூட 2014இல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்டு 2010ஆம் ஆண்டு வரை இம்மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தும் கூட இவ்வீட்டை பிரதேச மக்கள் பாவனையின் நிமித்தம் புனரமைத்து வழங்கவில்லை என்ற மனவேதைன இப்பிரதேச மக்களிடம் காணப்படுகிறது என்பதை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.
அஷ்ரபின் மரணத்தின் பின்னர் அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் குறிப்பாக அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்கள்pல் முஸ்லிம் காங்கிரஸில் பதவி வகித்தவர்கள் மேற்கொண்ட அபிவிருத்தியை விடவும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவினாலும், முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பையினாலும் பல அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கிறது என்பதை எவரும் மறுக்க முடியாது. இவ்விரு பிரதேசங்களும் அபிவிருத்தியின் வாசத்தை நுகர்ந்தமை தேசிய அரசாங்கத்திலும் மாகாண அரச சபையிலும் அமைச்சுப் பதவிகளை வகித்த இவ்விரு முன்னாள் அமைச்சர்களினால்தான் என்பதையும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

தேசிய காங்கிரஸின் தலைவர் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவும் கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பையும்  தங்களுக்கு ஒதுக்கப்படும் வருடாந்த நிதியினூடாக பல்வேறு அபிவிருத்திப் பணிகளை இப்பிரதேசங்களில் மேற்கொண்டிருந்த போதிலும், 2015 மற்றும் அதற்கு முன்னர் நடைபெற்ற தேர்தல்களின் போது இப்பிரதேச மக்களின் பொரும்பாலானோர் முஸ்லிம் காங்கிரஸுக்கே வாக்களித்திருந்தனர். இருப்பினும், நடைபெறவுள்ள இத்தேர்தலில் இப்பிரதேசத்தின் வாக்களிப்பு எவ்வாறு அமையுமென்பதை தேர்தல் முடிவுகள்தான் வெளிப்படுத்தும்.

தேர்தல் களமும் மக்களின் வேண்டுதலும்

நடைபெறவுள்ள தேர்தலானது முஸ்லிம் காங்கிரஸின் கோட்டையாக் கருதப்படும் அம்பாறை மாவட்டத்தில் கடந்த காலத் தேர்தல்களை விடவும் இக்கட்சிக்கு சவால்களையும், நெருக்கடிகளையும் உருவாக்கியிருக்கிறது. பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, ஒலுவில், பாலமுனை, நிந்தவூர், சம்மாந்துறை, கல்முனை போன்ற முஸ்லிம் பிரதேசங்களில் கடந்த காலங்களில் முஸ்லிம் காங்கிரஸ் பெற்ற வாக்கு வீதங்களை விடவும் நடைபெறவுள்ள இத்தேர்தல் வீழ்ச்சியை ஏற்படுத்துமா என்ற கேள்வியும் நிலவுவதைக் காண முடிகிறது. ஏனெனில் கடந்த கால தேர்தல்களில் இல்லாத அளவிற்கு இக்கட்சி மும்முனைப் போட்டிக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதைக் காணலாம். தேசிய காங்கிரஸ், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு, தேசிய நல்லாட்சிக்கான முன்னணி, ஆகிய கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பிரச்சாரங்கள் முஸ்லிம் காங்கிரஸுக்குச் சவாலாகவுள்ளதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது.

இருப்பினும், முஸ்லிம் காங்கிரஸ் இம்மாவட்டத்தின் அத்தனை உள்ளுராட்சி மன்றங்களையும் கைப்பற்றுமென இக்கட்சியின் தலைமை உட்பட கட்சி அங்கத்தவர்கள்; கூறி வருவதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.
அதுமாத்திரமின்றி, 2000ஆம் ஆண்டின் பின்னர் நடைபெற்ற தேர்தல்களின் போது இப்பிரதேச முஸ்லிம் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக பயன்படுத்திய யுக்திகளையே இத்தேர்தலிலும் முஸ்லிம் காங்கிரஸும் ஒரிரு கட்சிகளும் பயன்படுத்துகின்றன. முஸ்லிம் காங்கிரஸ் உட்பட ஏனைய கட்சி வேட்பாளர்களும் முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் அஷ்ரபைச் சந்தைப்படுத்தி வாக்குக் கேட்பதை காண முடிவதாகவும், இதில் அதிக சந்தைப்படுத்தலை முஸ்லிம் காங்கிரஸ் முன்னெடுத்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கட்சி ரீதியாக பிரிந்து நின்ற முஸ்லிம்களை ஒரு குடையின் கீழ் ஒன்றிணைப்பதற்காக அஷ்ரப் எழுதி வடிவமைத்த ‘ஆயிரம் விளக்குடன் ஆதவன் எழுந்து வந்தான்’ என்ற உணர்ச்சிப்பாடலும்; அவரது புகைப்படமும் வாக்குகளுக்காகச் சந்தைப்படுத்தப்பட்டு வரும் நிலையில், தென்னிலங்கையைச் சேர்ந்த ஒரு சிலர் அஷ்ரபினால் இச்சமூகத்திற்குப் புரியப்பட்ட பணிகளைப் பாராட்டுவதற்குப் பதிலாக இன்றும் குறை கண்டுகொண்டிருக்கிறார்கள்.
8வது பராளுமன்றத்திலுள்ள 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் 12 உறுப்பினர்கள் அஷ்ரபின் பாசறையில் பயிற்றப்பட்டவர்கள் அல்லது பயிற்றப்பட்டவர்களால் அரசியலுக்கு இழுத்து வரப்பட்டவர்கள் என்பதை மறைந்த தலைவர் அஷ்ரப் நாட்டு மக்களால் நேசிக்கப்பட்டவர் அல்ல என்று தென்னிலங்கையில் பேசி வருகின்றவர்கள் புரிந்துகொள்வார்கள் என அஷ்ரபின் அபிமானிகள் தெரிவிப்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும்.

முஸ்லிம் அரசியலில் மாத்திரமின்றி தேசிய அரசியலிலும் மாற்றத்தை ஏற்படுத்திய மறைந்த தலைவர் அஷ்ரபும், அவரது; அரசியல் பலத்திற்கு துணையாக நின்ற கிழக்கு வாழ் முஸ்லிம்களும் தென்னிலங்கையில் தூசிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதிலும் முஸ்லிம் காங்கிரஸின் உயர் பதவியில் இருப்பவர்கள் இந்நடவடிக்கையில் இறங்கியிருப்பது கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ{க்கான வாக்கு வங்கியில் சரிவை ஏற்படுத்தும்.
முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் கிழக்கு முஸ்லிம்கள் பற்றி நாகரியமற்ற முறையில் தனது முகநூலில் கருத்துக்களைப்; பதிவிட்டிருந்தமை மறைந்த தலைவர் நேசித்த கிழக்கையும் கிழக்கு மக்களையும் கொச்சைப்படுத்துவதாகவே அமையும். ஒரு நபரின் சிந்தனையின் வெளிப்பாடுதான் அவரது பேச்சும், நடத்தையுமென உளவியல் தத்துவம் சொல்கிறது. அந்தவகையில் நோக்குகின்றபோது, முஸ்லிம் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரின் பதிவானது கிழக்கு மக்கள் தொடர்பில் அவர் கொண்டிருந்த நீண்ட கால சிந்தனையின் வெளிப்பாடு என்பதை புரியவைத்துள்ளது.

“கிழக்கு மாகாணத்தவர்கள் சந்தர்ப்பவாதிகள், ‘அரசியல் செல்வாக்குடன் தொழில்களைப் பிச்சையாகக் கேட்டு அலைபவர்கள், ‘கிழக்கு மாகாணத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம், ‘எங்கள் வாசல் படிக்கட்டில் கிழக்கு மாகாணத்தவர்கள் வந்து கிடப்பீர்கள் ‘சுனாமி காலத்தில் நாங்கள்தான் உங்களுக்கு உதவினோம்  ‘நாங்கள் தலைமை தாங்குகின்றவர்கள்’ ‘நீங்கள் எப்போதும் தலைமை பின்னால் வருகின்றவர்க,ள்” என தனது முகப்புத்தகத்தில் பதவிவேற்றிருந்மை கிழக்கில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதுடன், முஸ்லிம் காங்கிரஸின் தலைமைக்கு புதிய நெருக்கடியையும் கொடுத்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான சூழ்நிலையில்தான் ஒலுவில் ‘லீடர் ஹவுஸ்’ தொடர்பான கோரிக்கைகளும் முன்வைக்கப்படுகிறது. 17 வருடங்களாக முஸ்லிம் காங்கிரஸினால் கண்டுகொள்ளப்படாது பாம்புகளினதும் ஏனைய ஊர்வனங்களினதும் வாழ்விடமாகவும், தேவையில்லாதவர்களின் தேவையற்ற விடயங்களுக்கான மறைவிடமாகவும்; பற்றைக்காடாகவும் காட்சியளிக்கும் பல இலட்சம் ரூபா பெறுமதியான் தலைவரின் இந்த வீட்டையும் அதன் காணியையும் மக்கள் பயன்பாட்டுக்கான ஒரு நூல்நிலையமாக, குர்ஆன் மத்தரஸாவாக, கலாசார, வரவேற்பு நிலையமாக, பயிற்சி நிலையமாக அல்லது அஷ்ரப் ஞாபகார்த்த நிலையமாகவேனும் மாற்றியமைக்க வேண்டும் என மக்கள் கோருகின்றனர். இதில் முஸ்லிம் காங்கிரஸ் அக்கறைகொள்ள வேண்டும். தேர்தல்களின் போது அஷ்ரபைச் சந்தைப்படுத்தி வாக்குகளை மாத்திரம் பெறாது சமூகத்தின் உரிமைகளைப் பாதுகாப்பதிலும், இப்பிரசேத்தின் அபிவிருத்தியிலும் அவர் கண்ட கனவுகளை, இலட்சியங்களை முஸ்லிம் காங்கிரஸ் மூலம் நிறைவேற்ற வேண்டும் என்பது இப்பிரதேச மக்களின் கோரிக்கையும் எதிர்பார்ப்புமாகும்.
இம்மக்களின் இக்கோரிக்கைகளையும், எதிர்பார்ப்புக்களையும் நிறைவேற்றி வைப்பது முஸ்லிம் காங்கிரஸின் தார்மீகப் பொறுப்பு மாத்திரமல்ல, வழிகாட்டி வாழ வைத்த தலைவனுக்கு அளிக்கும் ஆகக் குறைந்த கௌரவமுமாகும் என்பதை நினைவூட்டுவதே இக்கட்டுரையின் நோக்ககமாகும்.

விடிவெள்ளி – 24.01.2018

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here