அமைச்சர் றிஷாத் வில்பத்தை காட்டி அமைச்சையும் பாதுகாப்பையும் பெற்றாரா?

0
277

( ஹபீல் எம்.சுஹைர் )

அண்மையில் சகோதரர் வை.எல்.எஸ் ஹமீத் எழுதிய கட்டுரை ஒன்றில், அமைச்சர் றிஷாத் இழக்கப்பட்ட காணியின் பெயரால் அமைச்சுப் பதவியையும், பாதுகாப்பையும் பெற்றுள்ளதாக எழுதியுள்ளார். இதனைப் பார்த்த போது என்னுள் சில விடயங்கள் உதித்தன. அவரது இகழ்தல் சிந்தனை மூலம், என்னுள் அமைச்சர் றிஷாத் மீதான புகழ்தல் சிந்தனை உதித்துள்ளது.

சகோதரர் வை.எல்.எஸ் ஹமீத் சொல்வதைப் போன்று அமைச்சர் றிஷாத் இழக்கப்பட்ட காணியின் பெயரால் அமைச்சுப் பதவிகளை பெற்றவரல்ல. வடக்கில் காணிப் பிரச்சினைகள் தோன்றுவதற்கு முன்பே, அவர் அமைச்சுப் பதவியில் இருந்தவராகும். இதனை கூட தெரியாமல் தான், சகோதரர் வை.எல்.எஸ் ஹமீத் அமைச்சர் றிஷாத்துடன் இத்தனை காலமும் இருந்துள்ளார். இப்படியானவர் இருந்தால் தான் என்ன, போனால் தான் என்ன?

இன்று அமைச்சர் றிஷாத் அம்பாறை மாவட்டத்தில் தனது காலை பதித்துள்ளார். இதன் மூலம் அவர் புதிதாக எதனையும் அடைந்து கொள்ள வேண்டிய வேண்டிய தேவை அவருக்கில்லை . அவர் இங்கு வருவதற்கு முன்பே பலமான அமைச்சுப் பதவியில் தான் இருந்தார். இன்னும் அவர் எதனை பெற்றுக்கொள்ளப்போகிறார்? அவர் வன்னிப் பகுதியில் அபரிதமான செல்வாக்குடன் உள்ளார். அவர் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைமைப் பதவியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி பாராளுமன்றம் தெரிவாகக் கூடிய சாதகமான சூழ்நிலை உள்ளது.

ஆனால், அமைச்சர் ஹக்கீமோ கிழக்கு மாகாண மக்களின் வாக்குகள் மூலமாகத் தான் அமைச்சராக உள்ளார். அவர் இந்த கட்சித் தலைமையில் இருந்து நீங்கினால், அவருக்கு பாராளுமன்றத்தில் பீயோன் பதவி கூட கிடைக்காது. அவருக்கு கண்டி மாவட்டத்தில் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட எந்தவிதமான ஆசனங்களும் தேசிய கட்சிகளிடமிருந்து கிடைக்காது. கிழக்கு மாகாணத்தை காட்டியே அத்தனையும் பெற்றுக்கொண்டிருக்கின்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here