யாழ் முஸ்லீம் மக்களுக்காக உயிரையும் கொடுப்பேன்.-கே.எம் நிலாம்

0
244

(பாறுக் ஷிஹான்)

யாழ் மாநகரசபையின் முஸ்லீம் மக்களின் எல்லையினைப்பாதுகாக்க உயிரை தியாகம் செய்யவும் தயாராக இருப்பதாக யாழ் மாநகரசபை தேர்தலில் 13 ஆம் வட்டாரத்தில் ஐக்கிய தேசிய கட்சி அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூட்டணியில் இணைந்து வேட்பாளராக போட்டியிடும் கே.எம் நிலாம் தெரிவித்தார்.

யாழ் மாநகரசபைத்தேர்தலில் உள்ள முஸ்லீம் வட்டார மக்களிடம் ஆதரவு கோரி சென்ற வேளை மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்

யாழ்ப்பாண மாநகரசபைத்தேர்தலானது எமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தேர்தலாகும். நாங்கள் இதனை எமது உரிமைக்கான தேர்தலாக மட்டும் பார்க்க வேண்டும்.இல்லாவிடின் இருப்பதையும் இழந்து நிற்கும் சமூகமாக மாறும் நிலையே ஏற்படும்.

யாழ் மாநகரசபையானது கடந்த காலங்களில் யாழ் முஸ்லீம்களின் இதயப்பகுதியாக காணப்பட்டது.ஆனால் யுத்த நிலைமையினால் படிப்படியாக எமது பகுதிகள் துண்டாடப்பட்டுள்ளன.எனவே எஞ்சிய எமது நிலப்பரப்புகளையும் சொத்துக்களையும் பாதுகாப்பது நம் ஒவ்வொருவரதும் கடமையாகும்.

இன்று யாழ் மாநகரசபையின் பல பகுதிகள் ஊடாக எமது காணிகள் பறிபோய்க்கொண்டுள்ளது.எமது வளங்கள் சுரண்டப்பட்டுக்கொண்டுள்ளது.இவற்றினை தடுத்துநிறுத்தவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.அதனை நான் கட்டாயம் செய்வேன்.
எமது மாநகரசபையினை பாதுகாத்து எமது எதிர்கால சந்ததிக்கு வழங்கவேண்டிய பாரிய பொறுப்பு எமதுதலையின் மீது சுமத்தப்பட்டுள்ளது .அது விளங்காத சிலர் இன்று யாழ் மாநகரசபையில் வெற்றிபெற்று கூட்டமைப்பின் கோமாளிகள் தீர்வினைப்பெறப்போவதாக கூறிவருகின்றனர்.இவர்கள் இதனையே தொடர்ச்சியாக கூறிக்கொண்டிருப்பார்கள்.அவர்களினால் எமது எல்லை நிலங்களை பாதுகாக்கமுடியாது.

கடந்த காலங்களில் மீள்குடியேற்றத்திற்காக அமைச்சர் றிசாட் பதியூதீன் எமது மண்ணையும் மக்களையும் பாதுகாப்பதற்காக பலnவுறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தார்கள்.

அந்த வகையில் அமைச்சருடன் இணைந்து இந்த யாழ் முஸ்லீம்களின் மண்னை பாதுகாப்பதற்கு எனது உயிரைக்கூட தியாகம் செய்வதற்கு தயாராக இருக்கின்றேன்.என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here