மீண்டும் வித்துவான் கதை கூறிய ஹக்கீம் ; பஷீர் சேகுதாவூதின் செயற்பாடு எவ்வாறு அமையப்போகிறது..??

0
243

( ஹபீல் எம்.சுஹைர் )

சிலர் வாயால் வடை சுடுவார்கள். அந்த வகையில் பஷீர் சேகுதாவூதும் வாயால் வடை சுட்டுக் கொண்டிருக்கின்றாரா என்ற சந்தேகம் பலரிடைய காணப்படுகிறது. தன்னிடம் அமைச்சர் ஹக்கீம் சம்பந்தமான அது காணப்படுகிறது. இது காணப்படுகிறது என்றெல்லாம் படம் காட்டிக்கொண்டிருக்கின்றார். அண்மையின் தன்னிடம் மீண்டும் ஆதாரம் கேட்டால் சிறுவர் துஸ்பிரயோகம் வெளியாகும் என்றும் தனது முகநூலில் எச்சரிக்கை விடுத்திருந்தார். அந்த முகநூல் பதிவை அவர் நீக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்று அட்டாளைச்சேனையில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் வைத்து அமைச்சர் ஹக்கீம் வித்துவான், மகா வித்துவான் கதை கூறியதோடு, தன்னைப் பற்றி மிகக் கேவலமான பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுவதை அல்லாஹ்விடம் பாரம் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன் மூலம் இன்று பஷீர் சேகுதாவூத் போன்றோர் தன் மீது முன் வைத்து வரும் பிரச்சாரங்கள் பொய் என்பதை மக்களிடம் கூறுகிறார். இதனை நிரூபிக்க வேண்டய தேவை பஷீர் செகுதாவூதுக்குண்டு.

இதனை மிகக் கேவலமான ரீதியில் நிரூபிக்கத் தேவையில்லை. இலங்கை நாட்டில் உள்ள மிக முக்கியமான நபர்களிடம் அல்லது அதில் சம்பந்தப்படும் நபர்கள் மறைக்கப்பட்டாவது வெளியிடப்பட வேண்டும். இது அமைச்சர் ஹக்கீமை இகழ வேண்டும் என்பதற்காகவல்ல. அவர் எமது வாக்குகளை பெற்று எமது சமூகத்தை தவறான பாதையில் வழி நடாத்திக்கொண்டிருப்பதை மக்கள் முன் வெளிப்படுத்துவதற்காகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here