சிறுபான்மை இனங்கள் ஒன்று சேர்ந்து கல்முனை மாநகரத்தை அபிவிருத்தி செய்ய வேண்டும் – இணைப்பாளர் அஸ்வான் சக்காப் மௌலானா

0
229

 

(எம்.எஸ்.எம்.ஸாகிர்)

தேர்தல் காலங்களில் பிரிந்து சென்றாலும் தேர்தலுக்குப் பின்னர் தெரிவு செய்யப்படும் அனைத்து உறுப்பினர்களும் கட்சி பேதம்இன்றி தமிழர்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக செயல்பட்டு, கல்முனை மாநகரத்தை நவீன மாநகரமாக மாற்ற வேண்டும்என முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் சேவைகள் அமைச்சின் அம்பாறை மாவட்ட இணைப்பாளரும் ஐ.தே.கட்சியின்கல்முனை தொகுதி பிரசார இணைப்பு செயலாளரும் நியமனப்பட்டியல் வேட்பாளருமான அஸ்வான் சக்காப் மௌலானாதெரிவித்தார்.

பாண்டிருப்பில் ஐ.தே.கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து நடைபெற்ற பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும்போது மேற் கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

கட்சி பேதம் மற்றும் இன மத வேறுபாடுகளுக்கு அப்பால் கல்முனை மாநகரத்தை விஸ்தீரப்படுத்தி நவீன கல்முனையாகமாற்ற வேண்டும். அம்பாறை மாவட்டத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நகரம் கல்முனை. இவை நீண்ட காலமாகஅபிவிருத்தியில் பின்தங்கி வருகிறது. நான் சாய்ந்தமருதுவை பிறப்பிடமாக கொண்டவன். எப்பொழுதும் ஐ.தே.கட்சியின்முக்கிய உறுப்பினராக இருந்து வருபவன். கல்முனை தொகுதியின் பிரசார இணைப்பு செயலாளராக நீண்ட காலமாக இருந்துவருகிறேன். ஐ.தே.கட்சி தோல்வியை தழுவிய போதெல்லாம் ஐ.தே.கட்சிக்காக கல்முனை தொகுதியிலே அதன் வளர்ச்சிக்குமுக்கிய பங்கு வகுத்து வருபவன். ரணில் விக்கிரமசிங்க ஆட்சிப் பீடம் ஏற வேண்டும் என்று இரவு பகலாக எதிர்கட்சியில் இருந்துஅரும்பெரும் பாடுபட்டவர்களில் நானும் ஒருவன். மஹிந்தவின் கொடுங்கோல் ஆட்சியின் போது சாய்ந்தமருதுவில் தனியேநின்று ஐ.தே.கட் சிக்காக உழைத்தவன். நான் அரசியல் பரம்பரையில் வந்தவன். சென்ற 2011 ஆம் ஆண்டு நடைபெற்றஉள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஐ.தே.கட்சியில் வேட்பாளராக களம் இறங்கியவன். கட்சி என்னை நன்றாக மதித்து வந்தது. முஸ்லிம் சமய கலாசார மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் எம். எச். ஏ. ஹலீம் என்னை இனம்கண்டு அவருடைய அம்பாறைமாவட்ட இணைப்பாளராக இணைத்துக் கொண்டார். அதை வைத்து என்னால் முடியுமான உதவிகளை செய்து வருகிறேன்.கல்முனை பிராந்தியத்திலே சமூக அமைப்பான மருதம் கலைக்கூடல் மன்றத்தினை உருவாக்கி அதனூடாக பல சேவைகளைசெய்து வருகிறேன். நான் கல்முனை பற்றி எப்பொழுதும் பெரும் பெரும் அரசியல்வாதிகளிடம் கூறுவதுண்டு, அத்தோடு, தமிழ் – முஸ்லிம் உறவுகளுக்கு எப்பொழுதும் குரல் கொடுத்து வருபவன். மிக நீண்ட காலமாக தமிழரசுக் கட்சியில் இருந்த முன்னாள்செனட்டர் மர்ஹும் எஸ். இஸட். எம். மசூர் மௌலானா தமிழ் முஸ்லிம் உறவுகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தவர்.அவருடைய சகோதரர் கலைச்சுடர் சக்காப் மௌலானாவின் புதல்வர் தான் நான். அவர் எமது அயல் கிராமமான மருதமுனைமண்ணை சேர்ந்தவர் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். பெரும் அரசியல்வாதிகள் மருதமுனை கிராமத்துக்காகவும் எமதுகல்முனை பிராந்தியத்துக்காகவும் அயராது உழைத்தவர்கள். மசூர் மௌலானா தேர்தலில் நிற்கின்ற காலங்களில் இந்தகிராமத்து மக்கள் அவருக்கு வாக்களித்தவர்கள். இப்போதும் இருக்கின்றவர்களுக்கு அது நன்றாகத் தெரியும். அவருக்காககஷ்டப்பட்டவர்கள் நீங்கள். தமிழ் மொழியே எமது மூச்சு என்று அரசியல் செய்தவர் தான் மசூர் மௌலானா. ஒற்றுமையின்கயிற்றை பலமாக பற்றிக் கொண்டவர். தமிழரசு கட்சியில் இருந்து தமிழ் மண்ணுக்கு உரமூட்டியவர். அவரைப் போன்றஅரசியல்வாதிகள் இந்த மண்ணிலே உருவாக வேண்டும்.

எனவே எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் எமது ஐ.தே.கட்சியை வெற்றி பெறச் செய்து, தெரிவு செய்யப்படும் வேட்பாளர்கள்அனைவரும் கல்முனை மாநகர சபையை அலங்கரித்து சிறந்ததொரு மாநகரமாக மாற்ற அனைவரும் கைகோர்ப்போம் எனக்கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here