பிரதமர் ரணில் நாளை வாழைச்சேனைக்கு வருகை!

0
118

(ஓட்டமாவடி எச்.எம்.எம்.பர்ஸான்)    

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் பிரதமருமாகிய ரணில் விக்கிரமசிங்க நாளை 31 ம் திகதி புதன்கிழமை வாழைச்சேனைக்கு வருகைதரவுள்ளார்.

கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி அவர்களின் அழைப்பின் பேரில் விஜயம் செய்யவுள்ள பிரதமர் வாழைச்சேனை ஹைராத் வீதியில் மாலை 4 மணிக்கு நடைபெறவுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் பொதுக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியுதீனும் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here