அட்டாளைச்சேனை கூட்டத்தில் நஸீரை அவமானப்படுத்தினார் ஹக்கீம்

Spread the love

நேற்றைய முன் தினம் அட்டாளைச்சேனையில் மு.காவின் தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்று இடம்பெற்றிருந்தது. இப் பிரச்சார கூட்டத்தில் பல முக்கிய விடயங்களை அவதானிக்க முடிந்தது. இதில் மிக முக்கிய ஒரு சுட்டிக்காட்டலாக, பா.உ நஸீரை அமைச்சர் ஹக்கீம் ஒரு சாதாரண பாமர மகனை போன்று வர்ணிப்பதை அவதானிக்கலாம்.

“இம்மண்ணில் நாம் எதை பதிவாக்க விரும்புகிறோம் என்றால், இவ்வியக்கம் சாதாரண பாமர மகனுக்கும் மகுடம் சூட்டுகின்ற ஒரு இயக்கம்” என குறித்த நிகழ்வில் அமைச்சர் ஹக்கீம் உரையாற்றுகிறார். அவர் இதன் மூலம் நஸீர் படிக்காத ஒருவர் என்பதை கூற முற்படுகிறார். இது அவ்விடத்தில் அவசியமற்ற ஒன்றாகும். அதனை அவர் தவித்திருக்கலாம். இதனைத் தான் கூப்பிட்டு வைத்து அவமானப்படுத்துவது என்பார்களோ!

அவ்விடத்தில் பா.உ நஸீரின் பெருமைகளை அடிக்கி, இதற்காகத் தான் நான் நசீரை தெரிவு செய்தேன் என பெருமிதப்படுத்தி வழங்கியிருக்க வேண்டும். அது தான் பொருத்தமானது. அப்போது தான் அவரும் தலை நிமிர்ந்து தனது செயற்பாடுகளை அமைத்துக்கொள்வார். அவ்வாறில்லாமல், இவ்வாறு சொல்லி அவருக்கு இப் பதவியை வழங்குகின்ற போது, நன்கு படித்தவர்கள் அவரை பெரிதும் கணக்கில்கொள்ளாத நிலை தோன்றலாம்.

இதனை ஒத்த செயற்பாடுகளை, நான் எமது வாழ்வில் பல இடங்களில் அவதானித்திருப்போம். உயர் அதிகாரிகள், தனக்கு கீழ் உள்ளவரும் தொழிலாளர்களுக்கு மேல் உள்ள அதிகாரிகளின் தவறை சுட்டிக்காட்ட வேண்டுமாக இருந்தால், யாருமில்லாத ஒரு இடத்தில் வைத்தே சுட்டிக்காட்டுவார்கள். தொழிலார்களின் முன் நிலையில் சுட்டிக்காட்டமாட்டார்கள். அவ்வாறு தொழிலாளர்களின் முன்னிலையில் சுட்டிக்காட்டப்ப்படுமிடத்து குறித்த மேல் அதிகாரிகள் மரியாதையுடன் வேலை செய்ய முடியாது.

இதனை ஒரு தலைமைத்துவ பண்புள்ளவர் அறிந்திருக்க வேண்டும். இதனை அறியாதவர் தலைமைத்துவ பண்புக்கு தகுதியற்றவர். இதனை மக்கள் நன்கு உணர்ந்து, தங்களது வாக்குகளை கவனமாக பயன்படுத்த வேண்டும்.

துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
சம்மாந்துறை.

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*