பதுளை சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!

0
198

பெரும் வேலைப்பளுவுக்கு மத்தியிலும், தான் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 7 வயதான பாடசாலை மாணவி அமானி ராஹி தாவை சந்திக்க பதுளையிலுள்ள சிறுமியின் இல்லத்திற்கு நேற்றுமுன்தினம் இரவு சென்றிருந்தார். அண்மையில் கொழும்புக்குச் சென்று ஜனாதிபதியை அவரது அலுவலகத்தில் சந்தித்திருந்த சிறுமி அவரை தனது இல்லத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

இதன்படி பதுளையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்ற ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அமானி ராஹிதா என்ற மாணவியை சந்தித்து அன்புடன் சிறிது நேரம் உரையாடினார்.

ஜனாதிபதி பதுளைக்கு விஜயம் செய்யும் போது தனக்கு தொலைபேசி அழைப்பொன்றை எடுத்து தனது வீட்டிற்கு வருகை தருமாறு அழைப்புவிடுத்திருந்தார்.

அவரின் வீட்டிற்குச் சென்ற ஜனாதிபதியை அமானி ராஹிதா வெற்றிலை கொடுத்து வரவேற்றார். ஜனாதிபதி தனது வீட்டிற்கு வந்தமைக்காக நன்றி கூற, சிறுமி தவறவில்லை. ஜனாதிபதி தன்னைப் பார்ப்பதற்காக வருவார் என தான் கொஞ்சம் கூட நினைத்திருக்கவில்லை எனவும் அவரின் வருகை தனக்கு மிகுந்த சந்தோஷமாக உள்ளது எனவும் அவர் ஜனாதிபதியிடம் கூறினார்.

நீங்கள் பதுளைக்கு வரும்போது பயணக் கலைப்பாக இருந்ததா என ஜனாதிபதியிடம் அம்மாணவி விசாரித்தார். அவரின் வினாக்களுக்கு ஜனாதிபதியும் சிரித்த முகத்துடன் அன்பாக விடை பகிர்ந்தார்.

ஜனாதிபதியை பார்ப்பதற்காக ஆர்வத்துடன் வருகைத் தந்த ராஹிதாவின் நண்பர்களையும் ஜனாதிபதி மறக்காமல் அழைத்து அவர்களுடனும் உரையாடினார். அவர்களுடன் ஜனாதிபதியும் சிறுவர் பாடல்களைப் பாடி மகிழ்ந்தார். அவரது நண்பர்களையும் அழைத்துக் கொண்டு கொழும்புக்கு வரும்படி ராஹிதாவுக்கு ஜனாதிபதி கூறினார். சுமார் 20 நிமிடங்கள் வரை ஜனாதிபதி அங்கு தங்கியிருந்ததோடு ஜனாதிபதிக்கு தேநீர் உபசாரமும் வழங்கப்பட்டிருந்தது. இதன்போதுஅமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவும் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here