கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸின் சாம்ராட்சியம் சரிந்து காணப்படுகின்ற சங்கதி உங்களுக்கு தெரியுமா? – அமீர் அலி

0
195

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)    

தம்பாளை பிரதேசத்திற்கு கடமைப்பட்ட ரவூப் ஹக்கீம் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக இருந்து கொண்டு இதுவரை இப்பகுதிக்கு குடி நீர் வழங்காமல் இருப்பதற்கான காரணம் என்ன என்பதை மக்கள் விளங்கிக் கொள்ள வேண்டும் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதி அமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார்.

பொலநறுவை தம்மன்கடுவ பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய கட்சியில்; போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தம்பாளையில் நேற்று இரவு இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-

தம்பாளை பிரதேசத்திற்கு கடமைப்பட்ட ரவூப் ஹக்கீம் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக இருந்து கொண்டு குடிநீரை வழங்காமல் இன்னும் பத்து வருடத்திற்கு இழுத்தடிப்பு செய்து கொண்டிருப்பார். தம்பாளையை சிங்கப்பூராக்குவேன் என்று சொல்லுவார், சில முஸ்லிம் பகுதிகளுக்கு செல்வதற்கு கடவுச் சீட்டு எடுத்துச் செல்ல வேண்டுமா என்ற பயணம் வருகின்றது

கிழக்கு மாகாணத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சாம்ராட்சியம் சரிந்து காணப்படுகின்ற சங்கதி உங்களுக்கு தெரியுமா? இவர்களோடு பல வருடங்களாக இருந்தவர்கள் தற்போது இவர்களுடன் இல்லை.

தேர்தல் காலத்தில் மாத்திரம் வருவார்கள் நான் ஆரம்பத்தில் கல்வி கற்ற வகுப்பறை என்று சொல்லுவார்கள். அது அப்படித்தான் இருக்கும் அதை மூன்று மாடி கட்டிக் கொடுக்க வேண்டும் என்று நினைக்க மாட்டார்கள். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு 17 வருடம் தலைமைத்துவத்தை கொடுத்தீர்கள் ஆனால் இங்கு உள்ள பாடசாலையை தேசிய ரீதியில் தரம் உயர்த்தி இருக்க வேண்டும். ஆனால் இங்கு இவரால் எதுவும் செய்யப்படவில்லை

தங்கள் பகுதியில் உள்ள குறுகிய வாக்குகளை கொண்டு அரசியல் தலைவர்களிடத்தில் நல்ல விடயங்களை ஒட்டு மொத்தமாக பேரம் பேசுகின்ற சக்தியாக எதிர்காலத்தில் நீங்கள் மாற வேண்டும். எங்களிடத்தில் உள்ள வாக்குகளை உங்களுக்கு வழங்குவோம் எங்களது பகுதியில் காணப்படும் தண்ணீர், காணிப் பிரச்சனை, விளையாட்டு அரங்கு தேவை இன்னும் பல்வேறு தேவைகளை செய்து தர வேண்டும் என்று சொல்லி வாக்குகளை வழங்குவீர்கள் என்று சொன்னால் அது தான் அரசியல் சாணக்கியம் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here