இந்த அரசாங்கம் சுகாதார திட்டத்தின் மூலம் இலவசமாக உதவிகளை வழங்கி வருகின்றது.- தயா கமகே

0
320

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)    

கடந்த அரசாங்க காலத்தில் இருதய நோயாளர்கள் வைத்தியசாலைக்கு சென்றால் மருந்துகளை வெளியில் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை இருந்தது என ஆரம்ப கைத்தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்தார்.

வாழைச்சேனை மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபைக்கு ஐக்கிய தேசிய முன்னனியில்; போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து வேட்பாளர் எம்.எப்.எம்.ஜஃபர் தலைமையில் வாழைச்சேனையில் நேற்று இரவு இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் மேற்சொன்னவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-

மகிந்த ராஜபக்ஷவினால் மேற்கொள்ள அநீதிகளை சகித்துக் கொள்ள முடியாமல் அந்த அநீதிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முகமாக பிரதமர் மைத்திபாலவை பொது அபேட்சகராக கொண்டு வந்து நல்லாட்சிக்கு பாரிய பங்களிப்பினை ரணில் எற்றுக் கொண்டதற்காக நீங்களும் உங்கள் வாக்குகளை அளித்தீர்கள்.

அபிவிருத்தி நடவடிக்கைளை துரிதமாக்குவதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதற்கான நிதியியை ஒதுக்கீடு செய்து 2018ம் ஆண்டிலிருந்து அபிவிருத்தி திட்டங்களை மிக வேகமாக நடாத்துவதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டுள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தின் மூலம் தான் இலவச கல்வி முறை, இலவச பாடநூல், இலவச சீருடைகள், உணவுகள் வழங்கப்பட்டு இந்த நாட்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1994ம் ஆண்டு முதல் 2004 வரையான சந்திரிக்கா மற்றும் மகிந்த ஆகியோரில் காலப்பகுதியில் கல்விக்காக ஒதுக்கப்பட்ட பணத்தொகை குறைவாகவே வந்தது. பாடசாலையில் மாணவர்களை சேர்க்கும் போது ஆசிரியர் கூறுகின்றார் மேசை கதிரை கொண்டு வரவேண்டும் என்று கூறும் நிலைப்பாடு இவர்களது ஆட்சிக் காலத்தில் காணப்பட்டது.

மாணவர்களுக்கு காப்புறுதி திட்டம் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவினால் தான் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் இலவசமாக மருந்துகளைப் பெற்றுக் கொள்ளக் கூடிய முறை மாணவர்களுக்கு எமது அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த அரசாங்க காலத்தில் இருதய நோயாளர்கள் வைத்தியசாலைக்கு சென்றால் மருந்துகளை வெளியில் பெற்றுக் கொள்ள வேண்டிய நிலை இருந்தது. ஆனால் இந்த அரசாங்கம் சுகாதார திட்டத்தின் மூலம் இலவசமாக உதவிகளை வழங்கி குணப்படுத்தி வருகின்றது.

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் கூட நோயாளிகள் மருந்துகளை பெற்றுக் கொள்வதிலும் பாரிய பிரச்சனைகளை ஏற்படுத்தினார்கள். இதற்கு பின்னால் பாரிய மோசடி குழு காணப்பட்டது. புற்றுநோயாளிகள் கூட அவதிப்பட வேண்டிய நிலை காணப்பட்டது. ஆனால் இப்போது எந்தளவு பெறுமதியான மருந்துகளையும் அரச வைத்தியசாலைகளில் இருந்து இலவசமாக பெற்றுக் கொள்ளக் கூடிய நிலைமை காணப்படுகின்றது என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here