கல்முனையில் லண்டன் தமிழ் வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் அனுசரைணயில் 140 கற்றரக்ட் கண் சத்திர சிகிச்சைகள்

0
270

(எஸ்.எம்.எம்.முர்ஷித்)    

லண்டன் தமிழ் வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் அனுசரைணயுடன் கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த வாரம் இரு நாட்களில் 70 லட்ச ரூபா பெறுமதியான 140 ஏழை கண் நோயாளர்களுக்கான கற்றரக்ட் சத்திர சிகிச்சைகள் முற்றிலும் இலவசமாக செய்து முடிக்கப்பட்டிருக்கின்றன.

வைத்திய அத்தியட்சகர்களான இரா.முரளீஸ்வரன் (கல்முனை) கு.சுகுணன் (களுவாஞ்சிக்குடி) ஆகியோரின் ஏற்பாட்டில், கற்றரக்ட் சத்திர சிகிச்சை நிபுணர் பி.சிறிகரநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கற்றரக்ட் சத்திர சிகிச்சை முகாம் நடைபெற்றது.

லண்டனிலிருந்து வந்த ஈழத்து கண் வைத்திய நிபுணர்களான எம்.லோகேந்திரன் (வட்டுக்கோட்டை) கற்றரக்ட் சத்திர சிகிச்சை நிபுணர் பி.சிறிகரநாதன், ராதா தர்மரெட்னம் (களுவாஞ்சிக்குடி) காந்தா நிறஞ்சன் (மட்டக்களப்பு) ஆகியோருடன் கண் வைத்திய நிபுணர்களான எஸ்.சந்திரகுமார் (யாழ்ப்பாணம்) ஏ.பி.கங்கிலிபொல (கல்முனை) பி.டயஸ் (மொனராகல) உள்ளிட்ட 8 வைத்திய நிபுணர்கள் பங்கு கொண்டனர்.

இலங்கையின் தென்பகுதியிலுள்ள மருத்துவ மனைகளில் இலவசமான சத்திர சிகிச்சைகளுக்காக காத்திருப்புப் பட்டியலில் வருடக்கணக்கில் இருக்கும் போது அவர்களின் நோய் அந்தக் காத்திருப்புக் காலத்தில் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்படுகிறது.

இவ்வாறான சத்திர சிகிச்சை முகாம்களை இலங்கையில இருந்து புலம்பெயர்ந்து வாழ்கின்ற வைத்திய நிபுணர்கள் தாய் நாட்டிற்கு தொடர்ச்சியாக நடத்துவார்களாயின் எமது ஈழத்தில் வாழ்கின்ற ஏழை நோயாளிகளுக்புப் பெரும் பாக்கியமாக இருக்கும்.

இவ்வாறான விடயங்களைக் கருத்தில் கொண்டு இது போன்ற சந்திர சிகிச்சை முகாம்களை வருடத்தில் ஒரு தடவையேனும் நடத்தினால் சிறப்பாக இருக்கும் என பயனாளிகள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here