யார் இந்த ஹஷீம் அம்லா!

0
449

இந்திய வம்சாவளியான தென் ஆபிரிக்காவின் இன்றைய கிரிக்கெட் உலகின் மறக்க முடியாத நம்பிக்கை நட்சத்திரம்.

பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.

விளையாட்டிற்காக மதத்தை விட்டு வெளியே செல்பவர்களுக்கு மத்தியில் இஸ்லாம் என்ற உயரிய சன்மார்க்கத்திற்காக இன்று வரை தான் விளையாடும் போட்டியில் பெறும் தனக்கு உரித்தான ஒவ்வொரு ஊதியத்திலிருந்தும்

சுமார் 50 சதவிகிதத்தை அபராதமாக கொடுத்து வருகிறார் என அறியக் கிடைத்தது.

காரணம் தென் ஆபிரிக்க அணி அணியும் T shirt விளம்பரமாக மதுபோதை நிறுவனங்கள் செயல்படுகின்றது. அவற்றின் logo பதியப்பட்ட T shirt அணிய மறுப்பதற்காகவே அவருக்கு இந்த அபராதமாம் அல்லாஹு அக்பர்.

 

ஆனால் இன்றும் தனது மதத்தையும் விளையாட்டையும் மதித்து நடக்கும் மகா உன்னத மனிதர் ஹஷீம் அம்லா.

முஸ்லிம் வீரர்கள் என்பதற்காக வெறும் பெயர் தாங்கி முஸ்லிம் வீரர்களுக்கு ஆதரவு தெரிவிப்பவர்களே….

நேர்மையின் சின்னம்
ஹஷீம் அம்லாவைப் போன்ற இஸ்லாத்தை எந்நிலையிலும் விட்டுக்கொடுக்காத நேர்மையான ஒரு வீரரைப்பார்த்தாவது படிப்பினை பெறத் தவறாதீர்கள்.

தென் ஆப்ரிக்கா அணியின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டைன் குறிப்பிட்டார் வீரர்களின் அரையில் நான் கோபப்படும் போது திரும்பிப் பார்த்தால் ஹஷீம் அம்லா குர்ஆன் ஒதிக் கொண்டிருப்பார்.

அதை பார்க்கும் போது எனது மனம் அப்படியே சாந்தமாகிவிடும்.

தென் ஆப்ரிக்காவின் மற்றுமொரு வேகப்பந்து வீச்சாளர் வைன் பானல் கூறும் போது,

“தான் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதற்கான காரணம் ஹஷீம் அம்லாவின் செயற்பாடுகள் தான்.

அவரது நடவடிக்கைகளால் நான் கவரப்பட்டு பின்னர் அல்குர்ஆனை படித்து இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன் என கூறுகிறார்.

தென் ஆப்ரிக்காவின் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் குறிப்பிடும் போது தான் தற்போது இஸ்லாதை சரியாக பின்பற்றுவதற்கு ஹஷீம் அம்லாவின் நடத்தைகளே காரணம் என கூறுகிறார்.

க்ரஹம் ஸ்மித் குறிப்பிட்டார் “தான் அம்லாவை போன்ற நேர்மையான வீரரை இதுவரை பார்க்கவில்லை என்பதாக.

தென் ஆபிரிக்காவை சேர்ந்த முச்சதம் (311) பெற்ற ஒரேயொரு வீரர் ஹஷீம் அம்லா மட்டுமே.

ஒரு நாள் போட்டியில் 25 க்கும் அதிகமான சதம் பெற்ற ஒரேயொரு தென் ஆபிரிக்க வீரர் ஹஷீம் அம்லா தான்.

ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் வேகமாக 2000, 3000, 4000 மற்றும் 5000 ஓட்டங்களை பெற்ற ஒரே வீரர்.

Fastest batsman to reach 2, 000 (40 inns), 3, 000 (59 inns), 4, 000 (81 inns), 5,000 (101 inns)இ 6, 000 (123 inns) 7, 000 (150 inns).

ஆட்டமிழப்புக்கள் நிகழும் போது, நடுவர்கள் தீர்ப்பை வழங்கும் முன் தான் ஆட்டமிழந்ததாகத் தெரிந்தால் தானாகவே மைதானத்தை விட்டு வெளியேரும் நேர்மையான மனிதர்.

இவ்வாறான பல சந்தர்ப்பங்கள் மைதானத்தில் நடந்துள்ளன. (மஹேல, சங்கா போன்றவர்களும் ஆட்டமிழப்பின் போது நேர்மையாக நடந்துள்ளனர் என்பதை மறுக்க முடியாது.)

அணிகள் வெற்றிபெறும் போது Beer குலுக்குவது வழக்கம்.

எனினும் தென் ஆபி்ரிக்கா வெற்றிபெறும் சந்தர்ப்பத்தில் Beer குலுக்குவதை தவிர்ந்திருக்கின்றனர்.

“எபீ டீ வில்லியஸ்” கூறினார் ஹஷீம் அம்லாவை விட எங்களுக்கு Beer குலுக்குவது முக்கியமானதல்ல என்று.

எம்மில் யார் எந்தத் துறையில் இருந்தாலும்,

நம்முடைய மார்க்க நடவடிக்கைகளில் நாம் உறுதியாக இருப்போமேயானால் அதுவே நமதும் ஏனைய மக்களினதும் நேர்வழிக்கு காரணமாகிவிடும் என்ற உண்மையை நினைவுபடுத்துவதற்காகவே இந்தப் பதிவு.

அல்லாஹ் நம்மனைவரையும் மேலான தீனுக்காக கபூல் செய்வானாக…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here