4000 ரூபாவிற்கு பேத்தியை விற்ற பாட்டி!

0
202

இந்தியாவின் உத்தரபிரதேசம் மாநிலத்தில் வீட்டில் வேலை செய்து வந்த 15 வயது சிறுமியை சமையலறையில் கட்டி வைத்து பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

விபத்து ஒன்றில் தனது பெற்றோரை இழந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை வளர்த்து வந்த பாட்டி சிறுமியை 4000 ரூபாய்க்கு நபர் ஒருவருக்கு விற்றுள்ளார்.

அந்த நபர் சிறுமியை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு டெல்லியை சேர்ந்த ஒரு தம்பதியினரிடம் வீட்டுவேலை செய்வதற்காக அனுப்பி வைத்துள்ளான்.

அங்கு இரண்டு வருடங்கள் எந்த துன்புறுத்தலும் இல்லாமல் இருந்த சிறுமியை உத்தரபிரதேசத்தை சேர்ந்த தனது நண்பர் வீட்டுக்கு வேலை செய்ய அனுப்பி அந்த நபர் வைத்துள்ளான்.

சிறுமி டெல்லியில் வீட்டு வேலை செய்து சம்பாதித்த 30000 ரூபாயை வலுக்கட்டாயமாக பறித்துக் கொண்டு. மேலும் வீட்டில் தனது மனைவி குழந்தைகள் இருக்கும்போதே சமையலறையில் வைத்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளான்.

சிறுமி தடுத்தாலோ, சத்தம்போட்டாலோ கத்தியை வைத்து கொன்றுவிடுவதாக மிரட்டியதோடு, மேலும் சிறுமியை கட்டிப்போட்டும் பலாத்காரம் செய்ததோடு சிகரெட்டினால் சிறுமிக்கு சூடு வைத்து மிருகத்தனத்தையும் அரங்கேற்றியுள்ளார்.

இதனையடுத்து சில தினங்களுக்கு முன்னர் கொடூரனின் பிடியில் இருந்து தப்பித்த சிறுமி இரண்டு இளைஞர்களிடம் தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கமைய பொலிஸார் சந்தேக நபரை வலை வீசித் தேடி வருகின்றனர்.

பாதிப்படைந்த சிறுமி பரிதாப நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here