தியாகத்துக்கு மத்தியில் முளைத்தவரே அமைச்சர் றிஷாத்!

0
276

நாம் கஸ்டப்பட்டு ஒன்றை அடையும் போதே, அதன் உண்மை பெறுமானத்தை உணர்ந்துகொள்ள முடியும். இலகுவாக கிடைப்பவைகளின் பெறுமானத்தை, அவ்வளவு இலகுவில் உணர்ந்து கொள்ள முடியாது. மறைந்த தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களும், அவர்களோடு இருந்தவர்களும் மிகப் பெரும் தியாகங்களுக்கு மத்தியில், மு.கா என்ற கட்சியை வளர்த்து எடுத்தார்கள். அதனுடைய பெறுமானத்தை உணர்ந்திருந்தார்கள். மிகவும் நுணுக்கமாக தனது கட்சியின் பாதையை தெரிவு செய்தார்கள். மக்களுக்காக எந்த கஸ்டத்தையும் அனுபவிக்கும் வகையில் தங்களது செயற்பாடுகளை அமைத்திருந்தார்கள். இறைவனின் உதவியால், அக் கட்சி மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை பெற்றிருந்தது. தியாகத்துக்கு மத்தியில் செய்யப்படுகின்ற முயற்சிகளே அதிகம் பெறுமானமுடையவை.

அமைச்சர் ஹக்கீமுடைய தலைமைத்துவத்தை எடுத்துக்கொண்டால், அவர் எந்த வித தியாகங்களும் செய்யாமல் இலகுவாக தலைமைத்துவத்தை பெற்றுக்கொண்டார். அவர் குறித்த தலைமைத்துவத்தை பெற்றுக் கொடுத்தவர்களுக்கு கட்சி மூலம் நன்றிக் கடன் செலுத்தியாக வேண்டும். இதற்கு கட்சியை சில இடங்களில் வளைத்துச் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். அவருக்கு கட்சியினுடைய பெறுமானம் தெரியாது. ஏன் நோக்கம் கூட தெரியாது. அவருக்கு கட்சி ஒரு அரசியல் விளையாட்டுப் பொருள். தியாகங்கள் செய்யாது பதவிகளை அடைந்து கொண்டதால், மக்களுக்காக கஷ்டங்களை அனுபவிக்கும் சிந்தனை இராது. இறைவனும் அமைச்சர் ஹக்கீம் தலைமையிலான மு.காவின் வளர்ச்சியை குறைத்துக் கொண்டே செல்கிறான். இன் ஷா அல்லாஹ் இத் தேர்தலோடு அவரின் முழு பலமும் சுக்கு நூராக்கப்படும்.

அகில இலங்கை மக்கள் காங்கிரசினுடைய தலைவர் அமைச்சர் றிஷாத், விடுதலைப் புலிகளின் துப்பாக்கி ரவைகளுக்குள், அவர்களுக்கு அஞ்சாது அரசியல் செய்தவர். விடுதலைப் புலிகளினால் அகதியாக துரத்தப்பட்டவர்களில் ஒருவர். அம் மக்களுக்கு அரசியல் ரீதியாக தலைமைத்துவம் தாங்க ஒருவர் தேவைப்பட்டார். மர்ஹூம் அஷ்ரபின் மரணத்துக்கு பிறகு, அவர்களினுடைய துக்கத்தை அறிந்து துயர் துடைக்கும் வகையில் யாருமே இருக்கவில்லை. அமைச்சர் ஹக்கீமுடைய தலைமைத்துவம் அவர்களுக்கு விடிவை பெற்றுக்கொடுக்கவில்லை. அந் நிலையில் உதமாயனவர் தான், அமைச்சர் றிஷாத். அவர்கள் நினைத்த வகையில் அந்த மக்களை வழி காட்டினார். அந்த மக்கள் அவரை தங்கள் தலைவராக தேர்ந்தெடுத்தார்கள். அல் ஹம்துலில்லாஹ், அல்லாஹ்வுடைய ஏற்பாடு இன்று முழு இலங்கைக்கும் தலைமைத்துவம் தாங்கும் வகையில், தனது செயற்பாடுகளை அமைத்து வருகிறார்.

அவருக்கு ஏழை மக்களின் கஷ்டம் நன்கு தெரியும். உச்ச தியாகங்களை செய்துள்ளார். இலங்கை நாடே அஞ்சிய விடுதலைப் புலிகளுக்கே அஞ்சாத வீரன். அவர்களுக்கே அஞ்சாதவர், அல்லாஹ்வை தவிர வேறு யாருக்கு அஞ்சப் போகின்றார். மக்களுக்காக எத்தனையோ கஷ்டங்களை சகித்து வருகிறார். அல்லாஹ்வும் அவருடைய தியாகங்களை பொருந்திக்கொண்டு, அவரது கட்சியை இலங்கை நாட்டிலேயே வியாபிக்கச் செய்துள்ளான். இறைவனின் உதவியால் இத் தேர்தலோடு இலங்கையின் நான்காவது கட்சி என்ற அந்தஸ்தையும் பெறுவார். இன்றுள்ளவர்களில் மிகத் தியாகங்களுக்கு மத்தியில் வளர்த்துள்ளவர் அமைச்சர் றிஷாத் மாத்திரமே. அமைச்சர் றிஷாதை ஆதரித்து, சமூகத்தின் மீது அக்கறையுள்ள ஒரு சமூக தலைவனை உருவாக்குவோம்.

அல்- ஹாபிழ் அஸாம் அப்துல் அஸீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here