சுதந்திரத் தேசத்தில் முஸ்லிம்களின் தேசப்பற்று

0
284

(எம்.எம்.ஏ.ஸமட்)

பெரும்பான்மையினக் கட்சிகளான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், ஐக்கிய தேசியக் கட்சியும் இணைந்து உருவாக்கிய இத்தேசிய அரசாங்கத்தின் முதலாவது தேர்தலுக்கு இன்னும் ஆறு நாட்கள் உள்ள நிலையில் நாளை 4ஆம் திகதி இலங்கை அதன் 70 சுதந்திர தினத்தை கோலாகலமாகக் கொண்டாடத் தயாராவுள்ளது.

இற்றைக்கு 7 தசாப்பதங்களுக்கு முன்னர் இலங்கை மண் இம்மண்ணின் மக்களால் ஆளப்படுவதற்கான சுதந்திரத்தை வழங்கிய பிரித்தானிய எலிசபெத் மகாராணியின் இளைய புதல்வர் இளவரசர் எட்வட் காலிமுகத்திடலில் நாளை நடைபெறும் சுதந்திர தினத்தில் பிரதம விருந்தினராகக் கலந்துகொள்ளவுள்ளார்.
இந்நிலையில், இத்தேசத்தின் தலைவர் என்ற ரீதியில்; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சுதந்திர தின உரை எத்தகைய கருத்துக்களை உள்ளடக்கியதாக அமையப்போகிறது எனச் சர்வதேச சமூகமும் நாட்டு மக்களும் எதிர்பார்த்திருக்கின்றனர்.

ஏனெனில், எதிர்வரும் 10 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிலைப்படுத்தி இவ்விரு கட்சிகளின் தலைவர்களினால் முன்வைக்கப்பட்டு வருகின்ற முரண்பட்ட கருத்துக்கள் இத்தேர்தல் களத்தைப் பரபபரப்படையச் செய்திருக்கிறது.
மத்திய வங்கி பிணைமுறி விடயத்தை கையிலெடுத்துள்ள ஜனாதிபதி அது தொடர்பான பல்வேறு கருத்துக்களயும் சவால்களையும் முன்வைத்து வரும் நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியே மஹிந்தவைக் காப்பாற்றுகின்றது என்றும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வெளிப்பாடையாக இக்கருத்துத் தெரிவித்துள்ளபோதிலும், நான் மஹிந்தவைக் காப்பாற்றவில்லை என பிரதமர் ரணில் விக்கிரமரசிங்க கூறி வருகிறார். இவ்விரு கட்சிகளின் தலைவர்களும் ஏட்டிக்குப்போட்டியாகக் கருத்துக்களையும், வாக்குறுதிகளையும் முன்வைத்து வரும் அரசியல் சூழலில், இக்கூட்டாட்ச்சி 2020ஆம் ஆண்டு வரையும் தொடரும் என அரச தரப்பு அமைச்சர் ஊடகங்களுக்கு தெரிவித்து வருகின்றனர்.
இச்சமயத்தில். தென்னிலைங்கையில் ஒரு முகத்தையும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தில் வாழும் சிறுபான்மை மக்கள் மத்தியில் வேறுமொரு முகத்தையும் பெரும்பான்மை அரசியல் கட்சிகள் வெளிப்படுத்தி வருகின்றதை அவதானிக்க முடிகிறது.

இருமுக வெளிப்படுத்தலுக்கு மத்தியில் இந்நாட்டில் தீர்க்கப்படாதுள்ள தேசிய பிரச்சினைகளுக்கான தீர்வு, அதனுடனான அதிகாரப்பரவலாக்கம், சிறுபான்மை சமூகங்களின் அரசியல் உரிமைகள் தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் தென்னிலங்கையில் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அத்தோடு, இந்நாட்டில் வாழும் 9.7 வீத முஸ்லிம்கள் மீதும் வீண் பலி சுமந்தும் பிரச்சாரங்களும்; அவ்வப்போது முன்னெடுக்கப்டுவதும், இந்நாட்டின் குறிப்பிட்ட பிரதேசங்களில் வாழும் முஸ்லிம்கள் அடிப்படைவாதத்திற்கும், பயங்கரவாதத்திற்கும் துணபோகிறார்கள், இஸ்லாமிய இராஜியத்தை இலங்கையில் உருவாக்க முயற்சிக்கிறாhர்கள் என்ற அடிப்படையில் நூல்களை பிரசுரித்து வெளியிடுவதும், பெரும்பான்மை சமூகத்தின் மத்தியில் முஸ்லிம்களின் தேசப்பற்று தொடர்பில் சந்தேகங்களை ஏற்படுத்துவதும் என்ற தென்னிலங்கை பெரும்பான்மை அரசியலின் போலி முகங்களைத் தோலுரிக்க வேண்டியதும், இந்நாட்டு முஸ்லிம்கள் அன்றும் இன்றும் தேசப்பற்றுடனேயே இந்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டிய பொறுப்பும் இத்தேசத்தின் தேசிய இனம் என்ற ரீதியில் முஸ்லிம்களின் கடப்பாடாகவுள்ளது.

இந்நாடு சுதந்திரமடைவதற்கு முற்பட்ட காலம் முதல் தற்போதைய தேசிய அரசாங்கம் வரை இந்நாட்டில் ஆட்சி அதிகாரங்கள் ஏற்படவும். அவ்வாட்சி அதிகாரங்களின் முக்கிய பொறுப்புக்களை ஏற்றும்; முஸ்லிம்கள் இந்நாட்டின் சமூக, அரசியல், பொருளாதார வளர்ச்சியில் தங்களது வகிபாகத்தை வழங்கியிருக்கிறார்கள் என்ற உண்மையைப் புடம்போடுவதற்கு தற்போதைய அரசியல் சூழலையும் சுதந்திர தின நிகழ்வுகளையும் பயன்படுத்துவது அவசியமாகும்.

இலங்கையும் முஸ்லிம்களின் தேசப்பற்றும்

இலங்கை முஸ்லிம்களுக்கும் தாய்நாடுதான். இந்நாட்டை விட்டு ஓடாவோ அல்லது இந்நாட்டின் இறைமைக்கும் அதன் சுதந்திரத்துக்கும் பங்கம் ஏற்படுகின்றபோது, ஒதுங்கி நின்று வேடிக்கை பார்க்கவோ முடியாது. ஏனெனில், இந்நாட்டில் வாழ்ந்து மறைந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களின் வரலாறானது, வரலாது தெரியாத பெரும்பான்மையினர்; கூறுவதுபோன்றதல்ல. இந்நாட்டில் மிக்க தொண்மை வாய்ந்த வரலாற்றை கொண்ட ஒரு தனித்துவ இனமாக முஸ்லிம்கள் வாழ்;ந்து கொண்டிருக்கிறார்கள்.

விஜயனும் அவனது நண்பர்களும் கி.பி. 6ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வந்ததிலிருந்து இந்நாட்டின் வரலாறு எழுதப்பட்டது. அதற்குப் பின்னரே இலங்கையின் ஆட்சி முறைமை நிலவி வருவதாகக் கூறுகிறது. இலங்கையின் வரலாற்றில் முக்கிய நகரங்களை மையமாகக் கொண்ட ஆட்சிகள் நிலவியுள்ளன. அநுராதபுர ஆட்சிக் காலம், பொலநறுவை ஆட்சிக்காலம், யாப்பகுவ இராஜதானி, தம்பதெனிய இராஜதானி, யாழ்ப்பாணம் இராஜதானி, சீத்தாவக்கை இராஜதானி, கோட்டை இராஜதானி, கண்டி இராச்சியம் என்ற அடிப்படையில் அக்கால ஆட்சி புலம் காணப்பட்டுள்ளது.

இவ்வாட்சிக் காலத்தில் தென்னிந்திய ஆக்கிமிப்புக்களுக்கு இராஜதானிகள் முகம்கொடுக்க ஏற்பட்டுள்ளதுடன் இக்காலப்பகுதியிலேதான் இலங்கையில் இந்து சமயமும், பௌத்த சமயமும் பரவியது. அரேபியர்கள் வர்த்தக நோக்கத்திற்காக இலங்கைக்கு வந்து சென்றமையே இஸ்லாம் மார்க்கம் இலங்கையில் பரவக் காரணமாக இருந்தது என்று பரவலாகக் கூறப்படுகிறது. ஆனால், அரேபியர்கள் இலங்கைக்கு வருவதற்கு முன்னமே முஸ்லிம்கள் இங்கு வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கு பல ஆதாரங்கள் உள்ளதாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.
1300 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றை இலங்கை வாழ் முஸ்லிம்கள் கொண்டிருக்கிறார்கள். அவற்றுக்கோர் உதாரணமாக காலியில் உள்ள ‘கச்சு வத்த’ என்ற இடம் சான்றாகவுள்ளது. இவ்விடத்தின்; உண்மையான பெயர் ஹஜ்ஜுவத்தையாகும். புனித மக்காவுக்கு இற்றைக்கு 1300 வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த முஸ்லிம்கள் இவ்விடத்திலிருந்துதான் சென்றிருக்கிறார்கள். இதனை மையப்படுத்தியே இவ்விடத்துக்கு ஹஜ்ஜுவத்தை எனப் பெயர் வந்ததாக வரலாற்று ஆசிரியர்களின் பதிவுகள் மூலம் அறிய முடிகிறது.

ஐரோப்பிய போத்துக்கீசர்களும், ஒல்லாந்தர்களும், ஆங்கிலேயர்களும் இந்நாட்டை ஆட்சி செய்வதற்கு முன்னரும் ஆட்சி செய்த காலத்திலும் இந்நாட்டில் வாழ்ந்த முஸ்லிம்களின் பங்களிப்புக்கள் அக்கால ஆட்சியாளர்களுக்கு அளப்பெரியதாகவே இருந்துள்ளது. இராஜதந்திர துறையிலும், பாதுகாப்புத்துறையிலும், மருத்துவத்துறையிலும், வணிகத்துறையிலுமென பல்வேறு துறைகளில் அக்காலத்து ஆட்சியாளர்களுக்கு முஸ்லிம்கள் பங்களிப்பு செய்து தமது தேசப்பற்றைப் பறைசாட்டியிருக்கிறார்கள்;.

முஸ்லிம்கள் கடற் பயணத்திலும், பல மொழிகள் பேசுவதிலும், உள்நாட்டு, வெளிநாட்டு தொடர்பாடல்களிலும் என பல்வேறு விடயங்களில் தேர்ச்சியும் அனுபவமும் பெற்றிருந்ததனால் அத்தகையவர்கள் அக்காலத்து மன்னர்களின் தூதுவர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.
கி.பி. 1258ல் யாப்பகுவை ஆண்ட முதலாம் புவனேகுவபாகு என்ற மன்னன் அக்காலத்தில் இருந்த எகிப்தின் மம்லூக்கிய மன்னனுடனான வர்த்தக தொடர்பின் நிமித்தம் அபு உஸ்மான என்பவரை தூதுவராக அனுப்பி வைத்ததாகவும் கி.பி. 1762ஆம் ஆண்டளவில் கண்டி இராஜதானியாக இருந்த கீர்த்தி சிறி இராஜசிங்கனைச் சந்திப்பதற்காக கிழக்கிந்திய வர்த்தகக் கம்பணியின் தூதுவராக ஜோன் பைபஸ் திருகோணமலைக்கு வந்திருந்தவேளை, அவரை வரவேற்று கண்டிக்கு அழைத்துவருவதற்காக மவுலா முகாந்திரம் என்பவரது புதல்வாரன உதுமான் லெப்பை என்பவரை மன்னர் அனுப்பி வைத்திருந்ததாகவும் அதேபோல், போர்த்துக் கேயருக்கு எதிரான போராட்டத்தில் அவர்களை விரட்டியடித்து நாட்டைக் காப்பாற்றுவதற்காக கள்ளிக் கோட்டை சமோரினின் உதவியைப் பெற மாயாதுன்னை மன்னன் முஸ்லிம்களையே தூதுவராக அனுப்பி வைத்திருந்ததாகவும் வரலாறு கூறுகிறது.

தூதுவர்களாக மாத்திமின்றி, மன்னர்களின் பாதுகாப்பு, வைத்தியம், வாணிபம் என பல்வேறு விடயங்களில் அக்காலத்து பௌத்த சிங்கள் மன்னர்களின் விசுவாசத்துக்கும் நம்பிக்கைக்குரியவர்களாகவும் ஆளுமைமிக்கவர்களாவும் முஸ்லிம்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதற்கான வரலாற்றுச்சான்றுகள் பலவுள்ளன. இவ்வராற்றுப் பதிவுகளை இந்நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம்கள் இந்நாட்டுடன் விசுவாசமற்றவர்கள், அடிப்படைவாதிகள், பயங்கரவாதிகள், இந்நாட்டின் நிலங்களை கபளிகரம் செய்து இஸ்லாமிய இராஜியத்தை உருவாக்க முயற்சிக்கிறார்கள்; என யதார்த்திற்கு முரணான பதிவுகளை பெரும்பான்மை பௌத்த சிங்கள மக்கள் மத்தியில் பொய்யாகப் பரப்புகின்றகின்றவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டிய கடப்பாடு இந்நாட்டின் தொண்மை வாய்ந்த வரலாற்றைக் கொண்ட முஸ்லிம்களின் கடப்பாடாகும்.

சுதந்திரப் போராட்டங்களும் முஸ்லிம்களும்

இக்கடப்பாட்டைக் கொண்ட முஸ்லிம்கள் அக்காலத்து மன்னர்களின் நம்பிக்கைக்கும் விசுவாசத்துக்கும் மாத்திரமல்லாது இந்நாட்டை ஆட்சி செய்த அண்ணிய ஏகாதிபத்தியவாதிகளின் பிடியிலிருந்து இந்நாட்டை மீற்பதற்கும் தங்களான பங்களிப்புக்களைச் செய்திருக்கிறார்கள.; ஏறக்குறைய 443 வருடங்கள் இந்நாட்டை காலனித்துவ ஆட்சியில் வைத்திருந்த ஏகாதிபத்தியவாதிகளிடமிருந்து மீட்டெடுக்க அனைத்து இனத் தலைவர்களுடன்; ஒன்றிணைந்து போராடியிருக்கிறார்கள்.
கி.பி. 1505ஆம் ஆண்டு; போத்துக்கீசர் இலங்கையில் கால் பதிக்கும் வரை இந்நாடு பிராந்திய மன்னர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. ஒவ்வொரு ராஜ்யத்தையும் ஒவ்வொரு மன்னர்கள் ஆண்டு வந்தார்கள். போத்துக்கீசர்களின் காலூண்டலைத் தொடர்ந்து ராஜ்ஜீய மன்னர்களின் ஆட்சி வீழ்ச்;சி காணத் தொடங்கியதுடன் ஏகாதிபத்தியவாதிகளின் காலனித்துவ ஆட்சி மேலோங்கியது.

பலவீனமான மக்கள் தொகுதி அல்லது பிராந்தியக் குழுக்களின் மேலாதிக்கம் சார்ந்த அதிகாரம் அல்லது கட்டுப்பாட்டினைப் பிரயோகிக்கும் செயற்பாட்டுடன் தொடர்புடைய கொள்கைகளும் பிரயோகங்களும் காலனித்துவம் எனப்படுகிறது. காலனித்துவ ஆட்சியாது 443 வருடங்கள் இலங்கையில் நீடித்து. 1505ஆம் ஆண்டிலிருந்து 1658ஆம் ஆண்டு வரை போத்துக்கீசரின் ஆட்சியும், 1658 முதல் 1796 வரை ஒல்லாந்தரின் ஆட்சியும் 1796 முதல் 1948ஆம் ஆண்டு வரை பிரித்தானியரின் காலனித்துவ ஆட்சியும் இம்மண்ணில் நிலவியது.

அன்னியர்களின் காலனித்துவ ஆட்சிக் காலங்களின்போது, இந்நாடு பல சாதக, பாதக விளைவுகளை அனுபவித்தது. சாதாக விளைவுகளாக பொருளாதார விருத்தி, அரசியல் கட்டமைப்பு மாற்றம், போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்மை அவை தேவைக்கு ஏற்ற விருத்தி செய்யப்பட்டமை, தொழில்சாலைகள் நிறுவப்பட்டமை, கல்வி முன்னேற்றம் கண்டமை. பாடசாலைகள் உருவாக்கப்பட்டமை, சமூக முன்னேற்றமும் வாழ்க்கை முறைமையும் மாற்றம் கண்டமை போன்றவற்றைக் குறிப்பிட முடிவதுடன், பாதக விளைவுகளாக கலாசாரத்தில் மாற்றமும் அதன் பின்னரான சீரழிவுகளும், மத மாற்றம் மேற்கொள்ளப்பட்டமை, பொருளாதாரச் சுரண்டல், அடிமைப்படுத்தல் முதலான காலனித்துவத்தின் பாதக விளைவுகளையும் குறிப்பிடலாம்.

காலனித்துவ ஆட்சியினால் நாட்டு மக்கள் ஏதோவொரு வகையில் அடிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கையை அனுபவித்துக்கொண்டிக்கிறார்கள் பொருளாதாரம் சுரண்டப்படுகிறது. சுதந்திரம் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்ற உணர்வு மக்கள் மனங்களிலும், சமூகத் தலைவர்கள் மத்தியிலும் வலுப்பெற்றதனால் இந்நாடும் நாட்டு மக்களும் இந்நாட்டின் காற்றைச் சுதந்திரமாகச் சுவாசிக்க வேண்டும். தங்களைத் தாங்களே ஆள வேண்டும.; மாற்றான் ஆட்சியில் நாம் மன்றியிட்டுக் கிடக்க முடியாது என்ற ஒன்றுபட்ட உணர்வின் வழியே சமூக ஒருமைப்பாடுகளோடு ஒன்றிணைந்து நாட்டுக்கு சுதந்திரதைப் பெற்றுக்கொடுக்க உயிர், உடல், பொருள், கால நேரங்கள் அனைத்தையும் தியாகம் செய்து அந்நியரின் அடக்குமுறை, சுரண்டல் ஆட்சியிலிருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் தேச பிதாக்கள் மீடடெடுத்தார்கள்.

அவ்வாறு போராடி 1948ஆம் வெப்ரவரி மாதம 4ஆம திகதி இந்நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுக்கொடுத்த சுதந்திர இலங்கைத் தேசத்தின் தேச பிதாக்களாக டி.எஸ். சேனநாயக்க, எப்.ஆர் சேனநாயக்க, எஸ்.டப்ளியு. ஆர். டீ. பண்டாரநாயக்க, சேர் பாரன் ஜயதிக்க, ஈ.டப்ளியூ பெரேரா, டி.ஆர் விஜேயவர்த்தன, ஜேம்ஸ் பீரிஸ், ஆதர் வி. டையஸ், அநாகரிக தர்மபால, சேர். பொன்னம்பலம் இராமநாதன், சேர். பொன்னம்பலம் அருணாசலம், சேர். முத்துக்குமாரசுவாமி, சேர். வைத்தியலிங்கம் துரைசுவாமி, டாக்டர் ஆனந்த குமாரசுவாமி, ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரம்பிள்ளை ஆகிய பெரும்பான்மை சிங்களத் தலைவர்களுடனும் சகோதர தமிழ் தலைவர்களுடனும் இணைந்து முஸ்லிம்களின் அன்றைய தலைவர்களாக விளங்கிய டாக்டர் ரி.பி.ஜாயா, சேர்.ராசிக் பரீட், அறிஞர் சித்தி சின்னலெப்பை, வாப்பிச்சி மரைக்கார்  சேர் மாக்கான் மாக்கார். போன்றவர்கள் ஒன்றிணைந்து தேசப்பற்றை வெளிப்படுத்தி இத்தேசம் விடுதலை பெற உழைத்திருக்கிறார்கள். அவ்விடுதலையின் சுதந்திரத்தை இந்நாடு இன்று அனுபவித்துக் கொண்டிக்கிறது.

இச்சுதந்திரம் எல்லோருக்கும் பொதுவானது. இப்பொதுவான சுதந்திரத்தின் மூலம் கிடைக்கப் பெற்ற உரிமைகளை இந்நாட்டில் வாழும் அனைத்து இனங்களும் அனுபவிக்க வேண்டும். அதற்கு யாரும் தடையாக இருக்க முடியாது. இருப்பினும் இந்நாட்டில் 9.7 வீதம் வாழுகின்ற முஸ்லிம்கள் தங்களது தேச பிதாக்களின் பங்களிப்புடன் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தின் உரிமைகளை, இந்நாட்டில் தற்போதுள்ள அரசியலமைப்பில் பிரகாரம் அனுபவிப்பதற்கும் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியலமைப்பு மாற்றத்தினூடக அனுபவிப்பதற்கும் தேசிய இனம் என்ற ரீதியில் உரித்துடையவர்கள்.

இந்நாட்டை ஆண்ட இராஜதானிகளுக்கு அக்காலத்து முஸ்லிம்கள் எத்தகைய உதவிகளைச் செய்திருக்கிறார்கள். எந்தளவு பக்கபலமாக இருந்திருக்கிறார்கள். எவ்வகையான தியாகங்களைப் புரிந்திருக்கிறார்கள் என்ற வரலாறுகளையெல்லாம் மறந்துவிட்டு அல்லது அவற்றை திரிவுபடுத்தி விட்டு. இந்நாட்டில் முஸ்லிம்கள் அடிப்படைவாதத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள், இந்நாட்டின் நிலபுலங்களை ஆக்கிரமிப்புச் செய்து அபகரித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்நாட்டைக் கைப்பற்றப்பார்கிறார்கள் என இந்நாட்டில் வாழும் ஏனைய மக்களை நம்ப வைப்பதற்கான முயற்சிகளைச் செய்து முஸ்லிம்களை நெருக்கடிக்குள் தள்ளுவதற்கு பெரும்பான்மை சி;ங்கள மக்கள் மத்தியில் வாழும் சில குழுக்கள் இன்றும் முயற்சித்துக்;கொண்டிருக்கிறார்;கள் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

அரசில் பலமும் முஸ்லிம்களின் இருப்பும்

நாட்டின் இறைமைக்கும், கௌரவத்துக்கும் கலங்கம் ஏற்பட்ட போதெல்லாம் நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாற்றுவதற்காக போராடியவர்களோடு இணைந்து செயற்பட்ட முஸ்லிம்களை வந்தேறு குடிகள் என்றும் அடிப்படைவாதிகள் என்றும் பரப்புரை மேற்கொண்டு வருகின்றவர்களின் நடவடிக்கைகள் 2009ஆம் ஆண்டின் பின்னர் முஸ்லி;ம்களின் பல்வேறு விடயங்களில் நெருக்கடிகளையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தியிருக்கிறது.

ஒரு தனித்துவ இனத்திற்கு எத்தகை உரிமைகள் இந்நாட்டின் அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ளதோ அத்தகைய உரிமைகளை மீறாத வகையிலயே முஸ்லிம்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு சில சம்பவங்களும், ஒரு சிலரின் நடவடிக்கைகளும் அரசியலமைப்புக்கும், சட்டதிட்டங்களுக்கும் முரணாக இருந்தாலும் அவை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் தவறாகக் கருத முடியாது. நாட்டின் சட்டத்தையும், அரசியலமைப்பு விதிகளையும் யார் மீறுகிறார்களோ அவர்களுக்கான தண்டணையை வழங்குவது நாட்டின் சட்டமாகும்.
தற்போது செயற்படுகின்ற இலங்கையின அரசியலமைப்பின் 9ஆம் பிரிவு பௌத்த மதத்துக்கு முன்னுரிமை பற்றி குறிப்பிடுவதுடன் ஏனைய மதத்தவர்களின் சுதந்திரத்துக்கான அங்கீகாரத்தையும் வழங்கியிருக்கிறது. அத்துடன் 12ஆம் பிரிவின் இரண்டாம் பந்தி இந்நாட்டில் வாழும் சகருக்கும் சமவுரிமை பற்றியும் இன, மத அடிப்படையிலான பாராபட்சத்தைப் பற்றியும் குறிப்பிடுகிறது. அத்தோடு, பொய்ப்பிரச்சாரம், மத நிந்தனை என்பவற்றை எவர் புரிந்தாலும் அவை குற்றமென சட்டம் குறிப்பிடுகிறது.

இச்சுதந்திரத் தேசத்தில் வாழும் ஒரு தனித்துவ இனத்துக்கான உரிமையை இவ்வாறு அரசியலமைப்பு வழங்கியிருக்கின்ற நிலையில், அவற்றை ஏற்று வாழுகின்ற சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக, குறிப்பாக முஸ்லிம்களுக்கெதிராக அவ்வப்போது முன்வைக்கப்படுகின்ற பொய்ப்பிரச்சாரங்களும், மத நிந்தனைகளும், வெறுப்புப் பேச்சுக்களும், 1948 ஆம் ஆண்டு கிடைக்கப்பெற்ற சுதந்திரத்தை கேள்விக்கு உட்படுத்தியுள்ளதோடு சுதந்தரத்தினூடாக கிடைக்கப்பெற்ற உரிமையையும்; மறுப்பதாக அமைகிறது.

சுதந்திர தேசத்தில் சுதந்திரமாக வாழும் உரிமை கொண்ட மக்களும் மதமும் அவர்களின் கலை, கலாசார பண்பாட்டு விழுமியங்களும் கேள்விக்குப்படுத்தப்படும் நிலை மற்றும் மீறப்படும் செயற்பாடுகள் தொடர்ந்தும் வரலாற்றில் பதியப்படுவதற்கும் அவை எதிர்கால சந்தியினருக்கும் விட்டுச் செல்லப்படுவதற்கும், இடமளிக்காத வகையில் புதிய அரசிலமைப்பு மாற்றமானது அமையப் பெற வேண்டும்.

அதன் மூலம் உருவாக்கப்படும சட்டங்களும், சட்ட விதி முறைகளும் சமத்துவமாக அமுல்படுத்தப்பட வேண்டும். இவற்;றை உறுதி செய்வதற்கு முஸ்லிம்களின் அரசியல் பலம் உறுதியாக இருக்க வேண்டும். முஸ்லிம் சமூகம்சார் ஒவ்வொரு கட்சியும் கட்சித் தலைமைகளும் சுயநலங்களுக்காகவும், சொற்ப சலுகைகளுக்காகவும், பதவிகளுக்காகவும் ஒரு தலைமையை இன்னுமெரு தலைமை காட்டிக்கொடுத்துக்கொண்டு கட்சி அரசியலை வழிநடத்த முற்படுவார்களாயின் எதிர்கால முஸ்லிம்களின் இருப்பு கேள்விக்குறியாகும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

புதிய அரசயலமைப்பு மாற்றமானது எந்தவொரு தேசிய இனத்தினதும் அபிலாஷைகளுக்கு மாற்றமாக அமையாது இந்நாட்டில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்தத்தக்க வகையில் மாற்றியமைக்கப்பட்டு அதனூடாக தேசியப்பிரச்சினைக்கான தீர்வு பெறப்படுகின்றபோதுதான் 70 வருடங்களுக்கு முன்னர் பெறப்பட்ட சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாக அமையும். உண்மையான சுதந்திரத்தை மக்கள் அனுபவிக்க வழியேற்படும். அதனூடாக இந்நாட்டுக்கு சுதந்திரம் கிடைப்பதற்கு ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து செயற்பட்ட முஸ்லிம் தேச தியாகிகளினது தியாகங்கள் மாத்திரமல்லாது சிங்கள, தமிழ் தேச பிதாக்களின் அர்ப்பணிக்களும் தியாகங்களும் பெறுமதிமிக்கதாக அமையும்.

இலங்கையின் சுதந்திர வரலாற்றில் முஸ்லிம்களினதும், ஏனைய இனத்தினர்களினதும் தேசப்பற்று கலங்கப்படுத்தப்படாமல் இருக்க வேண்டுமாயின் இந்நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் சமத்துவத்துடனும், தங்களுக்கான உரிமையுடனும் வாழ்வதற்கான தீர்வு எட்டப்படும் சூழ்நிலை உருவாக்கப்படுவது அவசியமாகும்.

தேசிய பிரச்சினைக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொள்வதில் பூரண ஒத்துழைப்புக்களை வழங்க தயாராக உள்ளனேன் எனவும், இத்தேர்தலின் பின்னர் அரசியல் தீர்வு குறித்து உரிய தரப்புடன் பேசவுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ள நிலையில், அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் அசியல் தீர்வுகளைப் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்திருக்கிறார்கள்.

இவை மக்களின் வாக்குகளைப் பெறுவதற்னான தேர்தல் காலப்பிரச்சாரமாக இருந்தாலும், நிலைபேறான அரசியல் தீர்வு கிடைக்கும் என்ற மக்களின் எதிர்பார்ப்பு நீத்துப்போகச் செய்யப்படலாகாது. இத்தேசத்தின் சுதந்திரத்திற்காக தேசப்பற்றுடன் தியாகம் செய்த முஸ்லிம் தலைவர்கள் உட்பட அனைத்து இனத் தலைவர்களினதும் ஆத்மாக்கள் சாந்தியடையவும், உண்மையான சுதந்திரத்தை அனுபவிக்கவும் வேண்டுமாயின் இந்நாட்டில் நிரந்த அரசியல் தீர்வு குறுகிய காலத்திற்குள் எட்டப்படவேண்டும்;. இதனை நாளை நடைபெறும் சுதந்திர தினமும் 10ஆம், திகதி நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளும் உறுதி செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு சர்வதேச சமூகத்தினதும் இத்தேசத்தின் மக்களினதும் வினாவாகவுள்ளது. தற்போதைய தேசிய அரசாங்கத்தின்;; எதிர்கால செயற்பாடுகளே இத்தகைய யதார்த்தமிக்க எதிர்பார்ப்புக்களுடனான வினாவுக்கு பதிலாகவும், நம்பிக்கையாகவும் அமையும்.

வீரகேசரி – 03.02.2018

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here