கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யா விடுக்கும் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி

0
261

இலங்கை திரு நாடு 04.02.2018 ம்திகதி தனது 70வது சுதந்திர தினத்தை கொண்டாடுகின்றது .சுதந்திரம் கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த நாட்டு முஸ்லிம்களும் ஏனைய மதக்குழுக்களுடன் இணைந்து ஆங்கிலேயர்களை எதிர்த்துப்பேராடி தன்னுயிரை இந்ந நாட்டிற்காக நீத்தார்கள்.

முஸ்லிம்கள் இந்த நாட்டில் 1300 வருடங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த ஓர் இனக்குழுமம்.அரேபியர்களின் வர்த்தக தொடர்புகளுக்கு முன்னர் அவர்கள் வாழ்ந்து வந்தமைக்கான சான்றுகள் வரலாற்றில் சான்றாதாரமாக விரவிக்கிடன்கின்றன.இதற்கு காலியில் அமைந்துள்ள கச்சு வத்தை என்ற இடம் ஆதாரமாகும்(.ஹஜ்ஜு வத்தை )
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்கெதிராக போராடிய முஸ்லிம் தேச பக்தர்கள் வரலாற்றிலிருந்து இன்று படிப்படியாக திரிவுபடுத்தப்பட்டு வருகின்றமை கவலைக்குரியது.

முஸ்லிம்களின் நாட்டுப்பற்றையும் விசுவாசத்தையும் கண்டு கொண்ட சிங்கள மன்னர்கள் அவர்களை பெருமைப்படுத்தி சன்மானங்களை வழங்கினார்கள்.2ம் ராஜசிங்க மன்னனை கொலை செய்யும் நோக்கில் போர்த்துக்கீசப்படைகள் விரட்டி வந்த போது அவனை பாதுகாத்து காட்டிக்கொடுக்காமல் போர்த்துக்கீசப்படையினரால் கொலை செய்யப்பட்ட ஒரு முஸ்லிம் பெண்னிற்காக ” மா ரெக புலே “ என்னைக்காப்பாற்றிய இரத்தம் என வருந்திய மன்னன் பங்கரம என்ற கிராமத்தையே அந்தக்குடும்பத்திற்கு பரிசாக வழங்கினான். 1956ம்ஆண்டு வரை அதன் ஆவணம் பதுளை கச்சேரியில் பாதுகாக்கப்பட்டு வந்தது.பின்னர் இது மாயமாகிவிட்டதாக பதுளை மக்கள் தெரிவிக்கின்றனர்.

1982 ம்ஆண்டு காலப்பகுதிகளில் தமிழ் வரலாற்று நூல்களில் இந்தச்சம்பவம் இணைக்கப்பட்டு பிற்காலங்களில் மாற்றப்படுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
அவ்வாரே 1638 கண்டி நகரத்தின் மீது போர்த்துக்கேயர்கள்படை திரட்டி வந்த போது முஸ்லிம்களும் எதிர்த்துப்போராடி கண்டி மாநகரத்தை பாதுகாத்தமைக்காக 2ம் சிறீ ராஜசிங்க மன்னரால் அக்குரனை கிராமம் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளமை வரலாற்று ஆவணச்சான்றுகளாகும்.

அவ்வாறே தமிழீழ விடுதலைப்புலிகளுக்கெதிரான யுத்தத்தில் இந்த நாட்டு முஸ்லிம்கள் 30 வருடகாலம் இராணுவப்படையில் இணைந்து போராடி விடுதலை பெற்றுக்கொடுத்துள்ளமை கண் கண்ட சாட்சிகளாகும். முஸ்லிம்கள் பிரிவினைக்கெதிரானவர்கள்என்பதை நிரூபித்து சதா தங்களது நாட்டுப்பற்றை பறைசாற்றி வருபவர்கள்.

இந்த நாட்டில் சமாதானம் சுபீட்சம், அமைதி நிலவி நல்லாட்சி மலர வேண்டும் என ஆசைப்படுபவர்கள் முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் கடந்த கால முஸ்லிம்களின் வரலாற்றின் சுவடுகளைப்பின்பற்றி இந்த நாட்டின் விடுதலை சுபீட்சத்திற்காக முஸ்லிம்கள் இந்த நாட்டு மக்களுடன் கைகோர்த்து வருபவர்களே என்ற பேருண்மையை அனைத்து இலங்கையர்களுக்கும் தெரிவிப்பதுடன். 70 வது சுதந்திரத்தை கொண்டாடும் இத்தருணத்தில் அனைத்து இலங்கையர்களின் சார்பாகவும் வாழ்த்துக்களையும்.மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
என கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமிய்யாவின் செயலாளர் அஷ்ஷெய்க். எஸ்.எச்எம். அறபாத் – ஸஹ்வி விடுத்துள்ள சுதந்திர தின வாழ்த்துச்செய்தியில் குறிப்பிடுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here